Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SL vs NZ - நியூசிலாந்தை அலறவிட்ட இலங்கை.. சிஎஸ்கே பவுலர்கள் அபாரம்.. மெகா ஏலம் முன் நடந்த மேஜிக்

டம்புல்லா: இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்து அணி சாதனை படைத்த நிலையில், தற்போது அந்த அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டி20 போட்டி தம்புலாவில் நடைபெற்றது
இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங் 19 ரன்களும், கிரேன் பிலிப்ஸ் 13 ரன்களும் எடுக்க மைக்கில் பிரேஸ்வெல் அதிகபட்சமாக 27 ரன்கள் சேர்த்தார்.

sl vs nz srilanka vs new zealand ipl 2025 vs

கேப்டன் மிட்செல் சாட்ணர் 16 ரன்கள் எடுக்க இறுதியில் ஜக்காரி 27 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 19.3 ஓவரில் 135 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிஎஸ்கே வீரர் மகீஷ் தீக்சனா நான்கு ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் பதிராணா 25 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதை அடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. குசல் மெண்டிஸ் டக் அவுட் ஆக பதூம் நிசாங்கா 19 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து களமிறங்கிய பெரேரா மற்றும் கமெண்டு மெண்டிஸ் தலா 23 ரன்கள் எடுத்து கேப்டன் அஸலங்கா அபாரமாக விளையாடி 35 ரன்கள் இறுதியில் ஹசரங்கா 22 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 19 ஓவர் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது.

நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் சக்காரி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர் சி பி அணிக்காக ஏற்கனவே விளையாடிய ஹசரங்கா இன்றைய ஆட்டத்தில் 20 ரன்கள் விட்டு கொடுத்து,இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இதைப்போன்று வெல்லாளகே 20 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதே போன்று மற்றொரு சிஎஸ்கே வீரரான மிட்செல் சார்ட்னர் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

Story first published: Sunday, November 10, 2024, 7:02 [IST]
Other articles published on Nov 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+