Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SL vs OMAN: 19 பந்துகளில் அரைசதம்.. இலங்கை கேப்டன் ஷனக்கா சாதனை.. களத்தில் மோதலில் ஈடுபட்ட மெண்டீஸ்

பாலக்கல்லே: டி20 உலக கோப்பை குரூப் பி பிரிவு ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஓமன் அணிகள் பாலக்கல்லேவில் இன்று பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிசாங்கா மற்றும் காமில் மிஸ்ரா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதனால் இலங்கை அணி 5 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் 42 ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்த சூழலில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் மற்றும் பவன் ரத்தினாயகா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இதில் பவன் ரத்னாயக்கா 28 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். மறுமுனையில் குசன் மெண்டிஸ் 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இந்த தருணத்தில் பெரும் நெருக்கடியில் களமிறங்கிய இலங்கை அணி கேப்டன் தசன் சனக்கா 5 சிக்சர்கள் விளாசி 19 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரை சதம் அடித்த இலங்கை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இறுதியில் கமிண்டூ மெண்டீஸ் 7 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் போது இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் ஓமன் வீரர் சுபியான் முஹம்மது உடன் மோதலில் ஈடுபட்டார்.

அப்போது ஓமன் அணி கேப்டன் ஜெட்டந்தர் உடனடியாக இரண்டு வீரர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். குசல் மெண்டிசை கோபப்படுத்தும் வார்த்தையை சூபியான் முஹம்மத் பயன்படுத்தியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் சண்டையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலத்தில் ஓமன் அணி விளையாடியது. அந்த அணி 12 ரன்களில் இரண்டு விக்கெட் இழந்து தற்போது தடுமாறி வருகிறது. இலங்கை அணி முன்னதாக பிப்ரவரி 8ஆம் தேதி அய்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் அந்த அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய நெருக்கடியில் இலங்கை இருக்கின்றது.

Story first published: Thursday, February 12, 2026, 13:24 [IST]
Other articles published on Feb 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+