For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோல்வியா? டிராவா? கடும் போராட்டத்தில் பாகிஸ்தான் அணி.. செம பொழுதுபோக்கு இருக்கு

காலே : பாகிஸ்தானை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற மேலும் 9 விக்கெட் தேவைப்படுகிறது.

Recommended Video

TNPL 2022 Salem Cricket Ground எப்படி இருக்கு? | Sanga's Cricket Wrap *Cricket

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இலங்கை அணி இந்த ஆட்டத்தில் களமிறங்கியது.

டாஸ் வென்று முதலில் பேக் செய்த இலங்கை அணி தொடக்கம் முதலே அபாரமாக விளையாடியது.

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் - 3வது போட்டி ஓவர்கள் குறைப்பு.. யாருக்கு சாதகம்?இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் - 3வது போட்டி ஓவர்கள் குறைப்பு.. யாருக்கு சாதகம்?

சந்திமால் அபாரம்

சந்திமால் அபாரம்

பெர்னான்டோ அரை சதமும், கேப்டன் கருணரத்தினே 40 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். குசேல் மெண்டிஸ் எதிர்பாராத விதமாக மூன்று ரன்களில் ரன் அவுட் ஆனார். தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மேத்தியூஸ் 106 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர் நட்சத்திர வீரர் தினேஷ் சந்திமால் 80 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

டக் அவுட்

டக் அவுட்

தனஞ்செயா 33 ரன்கள் எடுக்க , விக்கெட் கீப்பர் டெக்வெல்லா 51 ரன்கள் எடுக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. கடந்த டெஸ்ட்டில் சதம் விளாசிய ஷபிக் டக் அவுட்டாக, பாபர் அசாம் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

தனஞ்செய்யா சதம்

தனஞ்செய்யா சதம்

இறுதியில் சல்மான் 62 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 231 ரன்கள் எடுத்தார். 137 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்சில் தனஞ்செய்யா சதம் விளாசி அசத்தினார். அவருக்கு கருணரத்னே 61 ரன்கள் சேர்த்து ஆதரவு வழங்கினார். இதனால் இலங்கை அணி 2வத இன்னிங்சில் 360 ரன்கள் எடுத்தது.

பரபரப்பான கட்டம்

பரபரப்பான கட்டம்

508 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் வெற்றிக்கு 419 ரன்கள் மேலும் தேவைப்படுகிறது. இலங்கை அணியின் வெற்றிக்கு மேலும் 9 விக்கெட்டுகள் தேவைப்படுவதால், போட்டி பரபரப்பான நிலையில் உள்ளது.

Story first published: Wednesday, July 27, 2022, 23:53 [IST]
Other articles published on Jul 27, 2022
English summary
SL vs Pak 2nd test day 4 –Pakistan fighting to save the match தோல்வியா? டிராவா? கடும் போராட்டத்தில் பாகிஸ்தான் அணி.. செம பொழுதுபோக்கு இருக்கு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X