இலங்கைக்கு டைமே சரியில்லை.. 2வது ஒருநாள் போட்டியிலும் வென்றது தென்னாப்பிரிக்கா!
தம்புல்லா : தென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.
நேற்று தம்புல்லாவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 244 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் டிக்வெல்லா 69 ரன்களும்,கேப்டன் ஏஞ்சலோ மத்தியூஸ் 79 ரன்களையும் எடுத்தனர். தென்னாபிரிக்கா தரப்பில் நிகிடி மற்றும் பெழுகுவாயோ தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் குவிண்டான் டி காக் சிறப்பாக விளையாடி 87 ரன்களை குவித்தார். கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
தொடரில் முன்னிலை :
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதிகப்படியான தோல்விகள் :
இலங்கை அணி கடைசியாக தான் பங்கேற்ற 36 ஒருநாள் போட்டிகளில் 27 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்புகள் :
இந்த போட்டியில் இலங்கை அணியின் சுரங்கா லக்மால் தனது 100ஆவது ஒருநாள் விக்கெட்யை வீழ்த்தினார்.
Story first published: Thursday, August 2, 2018, 16:16 [IST]
Other articles published on Aug 2, 2018


Click it and Unblock the Notifications