For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியின் உலக சாதனையை தகர்த்த ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா.. புதிய வரலாறு.. ஆட்டநாயகன் ரெக்கார்டு

ஹராரே: ஜிம்பாப்வேயின் நட்சத்திர ஆல் - ரவுண்டர் சிக்கந்தர் ராசா, விராட் கோலியின் உலக சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி இருக்கிறார் சிக்கந்தர் ராசா.

சனிக்கிழமை அன்று, ஹராரேவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிக்கந்தர் ராசா தனது அபாரமான பந்துவீச்சால் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

சிக்கந்தர் ராசா வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தச் சிறப்பான செயல்பாட்டிற்காக அவர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது சர்வதேச டி20 அரங்கில் அவர் பெறும் 17-வது ஆட்ட நாயகன் விருதாகும்.

SL vs ZIM Sikandar Raza Creates History Breaks Virat Kohli s World Record

இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் அமைப்பில் முழு உறுப்பினர்களாக இருக்கும் அணிகளில் 16 ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்று முதலிடத்தில் இருந்த விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி, சிக்கந்தர் ராசா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

விராட் கோலி இந்திய அணிக்காக 2010 முதல் 2024 வரை 125 டி20 போட்டிகளில் விளையாடி 16 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். இந்திய அணியின் தற்போதைய டி20 அணித்கேப்டன் சூர்யகுமார் யாதவும் 83 போட்டிகளில் 16 முறை இந்த விருதை வென்று கோலியுடன் சமநிலையில் இருந்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த ஜிம்பாப்வே, இலங்கை அணியை ஆரம்பம் முதலே திணறடித்தது. சிக்கந்தர் ராசாவின் சுழற்பந்து வீச்சும், சக பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சும் இலங்கை அணியின் ரன் குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டன.

இதன் விளைவாக, இலங்கை அணி 17.4 ஓவர்களில் வெறும் 80 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இது டி20 போட்டிகளில் இலங்கை அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

சிக்கந்தர் ராசாவைத் தவிர, ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளையும், பிளெஸ்சிங் முசரபானி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலங்கை அணியில் அதிகபட்சமாக கமில் மிஷாரா 20 ரன்களையும், அணித்கேப்டன் சரித் அசலங்கா 18 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர், 81 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என ஜிம்பாப்வே சமன் செய்துள்ளது.

சாதனைப் பட்டியலில் ராசாவின் ஆதிக்கம்:

முழு உறுப்பினர் நாடுகளின் வீரர்கள் பட்டியலில் சிக்கந்தர் ராசா தற்போது முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில், மலேசியாவின் விரன்தீப் சிங் 102 போட்டிகளில் 22 ஆட்ட நாயகன் விருதுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ராசா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகள்

1. விரன்தீப் சிங் - மலேசியா - 22 விருதுகள்
2. சிக்கந்தர் ராசா - ஜிம்பாப்வே - 17 விருதுகள்
3. விராட் கோலி - இந்தியா - 16 விருதுகள்
4. சூர்யகுமார் யாதவ் - இந்தியா - 16 விருதுகள்
5. முகமது நபி - ஆப்கானிஸ்தான் - 14 விருதுகள்
6. ரோஹித் சர்மா - இந்தியா - 14 விருதுகள்

Story first published: Sunday, September 7, 2025, 10:01 [IST]
Other articles published on Sep 7, 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+