Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வொயிட் வாஷ் தோல்வியை தவிர்த்தது இலங்கை !

கண்டி: தென்னாபிரிக்கா அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி. இதன் மூலம் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக தொடர்ச்சியாக கண்டு வந்த தோல்விகளுக்கு இலங்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

SL won 4 th ODI


முதல் 3 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி கண்டியில் நேற்று நடைபெற்றது. மழையின் காரணமாக போட்டி 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய இலங்கை அணி அதிரடியாக ஆடி 306 ரன்களை குவித்தது. குசால் பெரேரா,திசரா பெரேரா மற்றும் ஷனகா ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி பேட்டிங் பண்ணத்தொடங்கிய சிறிது நேரத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 21 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் தென்னாப்ரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இலங்கை அணி டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 3 ரன்களில் வெற்றி பெற்றது.

காயம் காரணமாக தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் டு ப்ளஸிஸ் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் குவின்டோன் டி காக் கேப்டன் ஆக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே தென்னாபிரிக்க அணி தோல்வியை தழுவியது.







Story first published: Friday, August 10, 2018, 15:42 [IST]
Other articles published on Aug 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+