Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

148 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை பந்தாடியது இலங்கை! சங்ககாரா சாதனை சதம்!!

ஹோபர்ட்: ஸ்காட்லாந்துக்கு எதிராக டாசில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்து 363 ரன்களை குவித்தது. சங்ககாரா மற்றும் தில்ஷன் ஆகியோரின் சதங்கள், இலங்கை ரன் குவிப்புக்கு பக்க பலமாக இருந்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 215 ரன்களில் ஆல் அவுட் ஆனது. எனவே 148 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின், ஹோபர்ட் நகர மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டியில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கையும், ஸ்காட்லாந்தும் மோதின.

SL won the toss and elected to bat

டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. திரிமன்னே மற்றும், தில்ஷன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

தில்ஷன் அதிரடி காண்பித்தாலும், ஸ்காட்லாந்து பந்து வீச்சில், திரிமன்னேமிகவும் திணறினார். 21 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில், அவர் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 21ஆக இருந்தது.

இதன்பிறகு, தில்ஷனுடன் ஜோடி சேர்ந்தார், குமார் சங்ககாரா. இந்த ஜோடி, ஸ்காட்லாந்து பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கியது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல், ஸ்காட்லாந்து பவுலர்கள் திணறினர்.

அடுத்தடுத்து இவ்விருவருமே செஞ்சுரி அடிக்க, அரங்கத்தில் குவிந்திருந்த இலங்கை ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது. அதிலும், குமார் சங்ககாரா, ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அடித்த நாலாவது சதம் இதுவென்பது சிறப்பு.

இதன்பிறகு 104 ரன்களில் தில்ஷன் அவுட் ஆன நிலையில், 124 ரன்களில் சங்ககாராவையும், 2 ரன்களில் ஜெயவர்தனேவையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கினார் ஜோஸ் தாவே. இருப்பினும், கேப்டன் மேத்யூஸ் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில், 51 ரன்களை குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இலங்கை 363 ரன்களை குவித்தது. இதையடுத்து விரட்டலை தொடங்கிய ஸ்காட்லாந்துக்கு 2வது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்காவின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார் கைல் கோட்சர்.

கலம் மேக்லியோட் 11 ரன்களிலும், மேட் மாச்சன் 19 ரன்களிலும் நடையை கட்ட, அந்த அணி 44 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால் கேப்டன், பிரிஸ்டன் மோம்சன் மற்றும், பிரெட்டி கோல்மேன் ஆகியோர் பொறுப்பாக ஆடி, அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் முறையே 60 மற்றும் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். இந்த ஜோடி பிரியும்போது ஸ்காட்லாந்து 32 ஓவர்களில் 162 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் அதன்பிறகு மளமளவென விக்கெட்டுகள் சரியவே, 43.1 ஓவர்களில், 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஸ்காட்லாந்து.

இதனால் 148 ரன்கள் வித்தியாசத்தில், இலங்கை வெற்றி பெற்றது. குலசேகரா மற்றும் சமீரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சங்ககாராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Story first published: Wednesday, March 11, 2015, 17:00 [IST]
Other articles published on Mar 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+