Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இந்தியா கூட ஆட விருப்பம் இல்லையா?" - இலங்கை அணியில் இருந்து மேலும் ஒரு சீனியர் விலகல்

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து இலங்கை அணியின் மேலும் ஒரு சீனியர் வீரர் விலகியுள்ளார். சிந்துபாத் கதை தினமும் வெளிவருவது போல, இலங்கை அணியில் இருந்து தினம் ஒரு வீரர் வெளியேறிக் கொண்டிருக்கிறார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி.. சாரி... இந்திய 'ஏ' அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், 20 வீரர்கள் கொண்ட 'ஏ' அணி இலங்கைக்கு சென்றுள்ளது.

 புதிய தேதிகள்

புதிய தேதிகள்

இதில் முதலில் ஜுலை 13ம் தேதி தொடங்கவிருந்த தொடர், இலங்கை அணியில் பரவிய கொரோனா காரணமாக, ஜுலை 18ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜுலை 23ம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 போட்டி ஜுலை 25ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜுலை 27ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜுலை 29ம் தேதியும் நடைபெறும் என்று புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன.

 வீரர்கள் லிஸ்ட்

வீரர்கள் லிஸ்ட்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுகிறார்.

 திடீர் விலகல்

திடீர் விலகல்

இத்தொடருக்கான இலங்கை அணியில் குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகிய மூன்று முக்கிய வீரர்கள், இங்கிலாந்தில் பயோ-பபுளில் மீறியதற்காக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸும் சம்பள பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து விலகிவிட்டார். அதேபோல், மற்றொரு சீனியர் வீரரான திசாரா ஃபெரேராவும் இத்தொடரில் இருந்து விலக உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இங்கிலாந்தில் விளையாடிய போது, பெரேராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னமும் குணமடையாமல் உள்ளது.

Recommended Video

Muttiah Muralitharanன் Bowling actionஐ Imitate செய்த Naren Muralitharan | OneIndia Tamil
 பினுரா பெர்னாண்டோ

பினுரா பெர்னாண்டோ

இந்நிலையில், இலங்கை அணியில் இருந்து முன்னாள் கேப்டன் குசல் ஃபெரேராவும் விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் குசல் பெரேரா பங்கேற்க முடியாது. பயிற்சியின் போது அவருக்கு வலது தோள்பட்டையில் சுளுக்கு ஏற்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல், வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோ நேற்று பயிற்சியில் ஈடுபட்ட போது இடது கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டதால், அவரும் அணியில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Story first published: Friday, July 16, 2021, 16:17 [IST]
Other articles published on Jul 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+