For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே எதையும் ஏமாத்த முடியாது..! அவுட்டுனா அவுட் தான்..! கிரிக்கெட்டில் வரும் அட்ராசக்க நடைமுறை

துபாய்: அவுட் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில், சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்கெனவே பல்வேறு தொழில்நுட்பங்கள் அணி வகுத்து வருகின்றன. ரன் அவுட்டுக்கு தீர்வு, எல்பிடபிள்யூ என பல தருணங்களில் அது அவுட்டா இல்லையா என்ற தீர்மானிக்கப்படுகிறது. டிஆர்எஸ் என ரிவ்யூ முறையும் கைகொடுத்து வருகிறது.

என்ன தான் இருந்தாலும் சில சொதப்பல்கள், அந்த ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுகின்றன. இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. முக்கியமான தொடர்களிலும் இத்தகைய சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

பந்துகளில் சிப்

பந்துகளில் சிப்

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, பட்டையைக் கிளப்பும் வகையில் சிப் பொருத்தப் பட்ட ஸ்மார்ட் பந்துகள் அறிமுகமாக உள்ளன. இந்த சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

கூக்கபரா நிறுவனம்

கூக்கபரா நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா நிறுவனம் இந்த சிப் பந்துகளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பந்துகளில் பல சிறப்பம்சங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

அதிர்வுகள் பதிவாகும்

அதிர்வுகள் பதிவாகும்

அந்த பந்துகளில் மிகவும் சிறிய அளவில் கீழே விழுந்துவிடாதபடி, அதிர்வுகளை தாங்கக் கூடிய சிப்புகள் பந்தில் பொருத்தப்படும். பந்து வீசப்படும் போது வேகம், பந்துவீச்சாளர் கையை விட்டு பந்து ரிலீசாகும் தருணத்தில் இருக்கும் வேகம் ஆகியவை கணக்கிடப்படும்.

எப்படி கண்டுபிடிக்கலாம்?

எப்படி கண்டுபிடிக்கலாம்?

இது தவிர, பந்து தரையில் பட்டு உயர எழும் போது அதன் வேகம், பவுன்சருக்கு பின் பேட்ஸ் மேனை நோக்கிச் செல்லும்போது வேகம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக அறிய முடியும். ஸ்பின் பவுலிங்கின் போது பந்து எந்தப் பக்கம் சுழன்று, எப்படி செல்லும் என்பதை கண்டுபிடிக்கலாம்.

துல்லியமாக அறியலாம்

துல்லியமாக அறியலாம்

டிஆர்எஸ் முறையிலும் அவுட் முடிவுகள் துல்லியமாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் பால் வந்துவிட்டால், எந்தவித குழப்பமும் இல்லாமல் அவுட்டை மிக துல்லியமாக அறிய முடியும்.

கேட்ச் சர்ச்சை

கேட்ச் சர்ச்சை

மேலும் ஒருவீரர் கேட்ச் பிடித்ததில் சர்ச்சை எழுந்தால்கூட பந்து எந்த நேரத்தில் கேட்ச் பிடிக்கப் பட்டது? தரையில் பட்டு பிடிக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்பே பிடிக்கப்பட்டதா என கண்டுபிடிக்கலாம்.

சோதனை முயற்சி

சோதனை முயற்சி

இந்த ஸ்மார்ட் பந்துகள் சோதனை முயற்சியில் உள்ளன. விரைவில் பிரதான கிரிக்கெட் போட்டிகளில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் காஸ்புரோவிக் தெரிவித்துள்ளார்.

விரைவில் பரிந்துரை

விரைவில் பரிந்துரை

இந்த ஸ்மார்ட் பந்துகள் முதல்கட்டமாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி20 போட்டியில் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளது. அதில் கிடைக்கும் வெற்றியை தொடர்ந்து, சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிகிறது.

Story first published: Monday, August 12, 2019, 14:51 [IST]
Other articles published on Aug 12, 2019
English summary
Smart ball will come soon to end the controversial dismissal in cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X