Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின், நூர் அகமதை விடுங்க! பட்டையை கிளப்பும் சிஎஸ்கேவின் மற்றொரு ஸ்பின்னர்! SMAT தொடரில் Hattrick

மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கு தேவையான தலைசிறந்த வீரர்களை வாங்கி இருக்கிறது. குறிப்பாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் ஒருவரான நூர் அஹமத் தற்போது சிஎஸ்கே ஆணினால் வாங்கப்பட்டிருக்கிறார்.ஏற்கனவே ஜடேஜா உள்ள நிலையில் தற்போது இந்த இரண்டு சுழற் பங்குவீச்சாளர்களும் சேர்ந்து இருப்பதால் சிஎஸ்கே அணியில் சுழற்பந்துவீச்சு பலம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.

smat 2024 shreyas gopal csk ipl auction 2025

சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சிக்கு சாதனமாக அமைக்கப்படும் என்பதால் இந்த மூன்று வீரர்களும் பிளேயிங் லெவனில் இடம் பெற்றால் எதிரணி நிச்சயம் கதிகலங்கும்.இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக மேலும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் இடம்பெற்று இருக்கிறார்.

சிஎஸ்கே அணி மெகா ஏதத்தில் கடைசி நேரத்தில் ஸ்ரேயாஸ் கோபால் என்ற வீரரை வாங்கியது. கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரேயாஸ் கோபாலும் திறமை வாய்ந்த சுழற் பந்துவீச்சாளராக விளங்குகிறார்.
அண்மையில் சையது முஸ்தாக் அலி தொடரில் பட்டையை கிளப்பி வரும் ஸ்ரேயாஸ் கோபால் இன்று பரோடா கர்நாடகா அணிக்கு இடையிலான ஆட்டத்தில் ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கர்நாடகா அணி சார்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் கோபால் ஆட்டத்தின் 11 வது ஓவரை வீசினார். இதில் முதல் பந்திலே ஷாசாவத் ராவ்த்தையும், இரண்டாவது பந்தில் ஹர்திக் பாண்டியாவையும், மூன்றாவது பந்தில் குருனல் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டை ஸ்ரேயாஸ் கோபால் அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

இதன் மூலம் நான்கு ஓவர் முடிவில் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை ஸ்ரேயாஸ் கோபால் கைப்பற்றினார். ஸ்ரேயாஸ் கோபால் 16 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆனார். 31 வயதான ஸ்ரேயாஸ் கோபால் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடி இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் சையது முஸ்தாக் அலி தொடரில் ஆறு போட்டுகளில் களம் இறங்கி 14 விக்கெட்டுகளை ஸ்ரேயாஸ் கோபால் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 3, 2024, 19:48 [IST]
Other articles published on Dec 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+