Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போச்சா! KKR க்கு 23 கோடியே 75 லட்சம் ரூபாய் அம்பேல்! சிஎஸ்கேவின் புதிய ஆல்ரவுண்டர் செய்த சம்பவம்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியால் 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார்.

வெங்கடேஷ் ஐயருக்கு இவ்வளவு சம்பளம் தேவையா என்று பலரும் விமர்சித்து வந்த நிலையில் அதற்கு ஏற்றார்போல் அவர் சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் தடுமாறியது ஷாருக்கான் அணி நிர்வாகத்தை வேதனை அடைய செய்திருக்கிறது.

smat 2024 ipl auction 2025 venkatesh iyer ipl

அது மட்டும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனுபவ வீரர் தீபக் ஹூடாவை ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் நடுவரிசையில் இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில் தீபக் ஹூடா சையது முஸ்தாக் @லி போட்டியில் பட்டையை கிளப்பினார். அதுமட்டுமல்லாமல் தற்போது பந்து வீச்சிலும் அவர் கலக்கியிருக்கிறார்.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அணிக்கு இடையிலான ஆட்டத்தில் கே கே ஆர் அணியால் 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், 14 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அது மட்டும் இல்லாமல் பேட்டிங்கில் 20 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 1330 என்று அளவில் இருக்கிறது.

பந்துவீச்சில் மொத்தமாக இரண்டு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தி 14 ரன்கள் விட்டுக் கொடுத்தார். தீபக் ஹூடா இதே போல் ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தினாலே, அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிஎஸ்கே அணியில் இருந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றுள்ள வேகப்பந்துவீச்சாளர் தீபக்சாகர் நான்கு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே விட்டுக் கொடுத்து 29 ரன்கள் சேர்த்தார்.

Story first published: Sunday, December 1, 2024, 16:24 [IST]
Other articles published on Dec 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+