For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SMAT 2024 -அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் CSK வீரர்கள் யாருமில்லை! பவுலிங்கில் ஒருவர் இருக்காரு

மும்பை : பிசிசிஐ நடத்தும் பிரதான t20 தொடரில் மிகவும் முக்கியமானது சையது முஸ்தாக் அலி தொடராகும். இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை 10 ஐபிஎல் அணிகளும் தீவிரமாக கண்காணித்து தங்களது அணியில் தேர்வு செய்வார்கள்.

தற்போது மெகா ஏலம் நடந்து முடிந்து இருப்பதால் 10 அணியின் ரசிகர்களும் தங்களது வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று கண்காணித்து வருகிறார்கள். ஏலத்தில் தேர்வு செய்யப்படாத வீரர்களும் எப்படியாவது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று இந்த தொடரில் தங்களது கோபத்தை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வெளிக்கொண்டு வருகிறார்கள்.

smat 2024 syed mushtaq ali trophy points table ipl

இந்த சூழ்நிலையில் சையது முஸ்தாக் அலி தொடரில் நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் திலக் வர்மா இந்த தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஐந்து போட்டிகள் விளையாடி 282 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும்.

இரண்டாவது இடத்தை மிசோரத்தை சேர்ந்த ஜங்ரா என்ற வீரர் பிடித்திருக்கிறார். இவர் ஐந்து போட்டிகளில் 252 ரன்கள் அடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஹச் எம் தேசாய் இருக்கிறார். இவர் ஐந்து போட்டிகள் விளையாடி 250 ரன்கள் அடித்திருக்கிறார். நான்காவது இடத்தில் பீகாரை சேர்ந்த கனி இருக்கிறார்.இவர் ஐந்து போட்டிகளில் 247 ரன்கள் அடித்திருக்கிறார்.

ஐந்தாவது இடத்தில் கேரளாவைச் சேர்ந்த குன்னம்மாள் இருக்கிறார். இவர் ஐந்து போட்டியில் விளையாடி 235 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆறாவது இடத்தில் சௌத்ரி என்ற வீரர் இருக்கிறார். இவர் ஐந்து போட்டியில் விளையாடி 234 ரன்கள் எடுத்திருக்கிறார். ஏழாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். இவர் 4 போட்டிகளில் விளையாடி 203 ரன்கள் எடுத்திருக்கிறார்.

எட்டாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். இவர் 4 போட்டிகளில் விளையாடி 225 ரன்கள் எடுத்துள்ளார். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் ஜஹித் சிங் என்ற வீரர் நான்கு போட்டிகளில் 11 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் சாகல் 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளும், மூன்றாவது இடத்தில் ஸ்ரேயாஸ் கோபால் ஐந்து போட்டிகள் விளையாடி 10 விக்கெட்டுகளும் வீழ்த்திருக்கிறார்.

இவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்சல் பட்டேல் 5 போட்டிகளில் பத்து விக்கெட்டும், அபித் முஸ்தாக் ஐந்து போட்டியில் விளையாடும் 10 விக்கெட்டும், மற்றொரு சிஎஸ்கே வீரரான முகேஷ் சவுத்ரி ஐந்து போட்டியில் விளையாடி பத்து விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார். மெகா ஏலத்தில் தேர்வு செய்யப்படாத ஷர்துல் தாக்கூர் நான்கு போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மற்றொரு சிஎஸ்கே வீரரான குருஜப்நீத்சிங் நான்கு போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுகளை விதித்திருக்கிறார்.

Story first published: Monday, December 2, 2024, 18:50 [IST]
Other articles published on Dec 2, 2024
English summary
SMAT 2024 - Most runs and Wickets By a Players in this season- Full details SMAT 2024 -அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் CSK வீரர்கள் யாருமில்லை! பவுலிங்கில் ஒருவர் இருக்காரு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+