Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SMAT 2024 - புள்ளி பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? காலிறுதிக்கு செல்ல முடியுமா?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பிறகு பிசிசிஐ யால் நடத்தப்படும் பிரதான t20 தொடர என்றால் அது சையது முஸ்தாக் அலி டி20 போட்டி தான். இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட்க்கு எப்படி ரஞ்சி கிரிக்கெட்டோ, அதே போல் டி20 தொடர் என்றால் இதுதான்.

இம்முறை சையது முஸ்தாக் அலி தொடர் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 38 அணிகள் ஐந்து பிரிவுகளாக பங்கு பெறுகிறது. இதில் ஏ,பி, சி ஆகிய மூன்று பிரிவில் 8 அணிகளும் மற்ற டி,இ பிரிவில் ஏழு அணிகளும் பங்கு பெறுகின்றன.

smat 2024 syed mushtaq ali trophy points table ipl

இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் முதல் இடத்தில் உள்ள அணி நேரடியாக கால் இறுதிச்சுற்றுக்கு சென்று விடும். இரண்டாவது இடத்தில் உள்ள அணிகள் எஞ்சி இருக்கும் இடங்களுக்கு போட்டி போடும் அந்த வகையில் தமிழக அணி தற்போது குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருக்கிறது. பரோடா 5 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி ஒரு தோல்வி என 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

சௌராஷ்டிரா 5 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி ஒரு தோல்வி என 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், குஜராத் அணி 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், கர்நாடகா 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும்,உத்தரகாண்ட் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், தமிழ்நாடு 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது.

தமிழ்நாடு அணி தற்போது ஆறாவது இடத்தில் இருப்பதால் எஞ்சியிருக்கும் 2 போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதே சமயம் மற்ற அணியின் உதவி இருந்தால் மட்டுமே தமிழ்நாடு அணியால் இரண்டாவது இடத்தை பிடிக்க முடியும். ஆனால் அது மிகவும் கடினமாகும். குரூப் ஏ பிரிவை பொறுத்தவரை ராஜஸ்தான் பெங்கால் அணி முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கிறது.

நடப்பு சாம்பியன் ஆன பஞ்சாப் அணி நான்காவது இடத்தில் இருக்கிறது. குரூப் சி பிரிவில் டெல்லி அணியும் உத்தரப்பிரதேச அணியும் முதல் இரண்டு இடத்தில் பிடித்து இருக்கிறது. குரூப் டி யில் விதர்பா, அசாம் அணியும், குரூப் இ பிரிவில் ஆந்திரா, கேரளா, மும்பை ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடத்திலும் பிடித்திருக்கிறது. நாக் அவுட் சுற்று போட்டிகள் ஒன்பதாம் தேதி முதல் தொடங்குகிறது.

Story first published: Monday, December 2, 2024, 18:25 [IST]
Other articles published on Dec 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+