Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சையது முஸ்டாக் அலி கோப்பை 2025: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார்?

மும்பை: சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பிசிசிஐ நடத்தும் முதன்மை டி20 தொடரான இந்த போட்டியில் எந்த வீரர்கள் அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுத்திருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் ஜார்க்கண்ட் அணி கேப்டன் இசான் கிஷன் இருக்கின்றார். இவர் 10 இன்னிங்ஸில் விளையாடி 517 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். இந்த தொடரில் அவர் அதிகபட்சமாக 33 சிக்சர்களை அடித்து இருக்கின்றார்.

SMAT 2025 Ishan Kishan

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹரியானா வீரர் அன்கீத்குமார் இருக்கின்றார். இவர் 11 இன்னிங்ஸில் 448 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஐந்து அரை சதம் அடங்கும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் குமார் குஷ்காரா இருக்கின்றார். இவர் 10 இன்னிங்ஸ்களில் 422 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் நான்கு அரை சதம் அடங்கும்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ஹரியானாவின் யாஸ்வரன் தளால் இருக்கின்றார். இவர் 10 இன்னிங்ஸில் 398 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஐந்து அரை சதம் அடங்கும். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரஹானே இருக்கின்றார். இவர் 10 இன்னிங்ஸ்கலில் 391 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரை சதம் அடங்கும்.

இதேபோன்று அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஜார்க்கண்ட் வீரர் சௌரங்க் மிஸ்ரா 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று ராஜஸ்தான் அணியின் அசோக் சர்மா 22 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பகிர்ந்துள்ளார். இதேபோன்று சிஎஸ்கே வீரரும், ஹரியானா அணிக்காக விளையாடும் அன்சூல் காம்போஜ் 11 இன்னிங்ஸில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

அதேபோன்று விதர்பா அணியின் யாஷ் தாக்கூர் 7 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஜார்கண்ட் அணியின் அங்கித் ராய் 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிவம் சுக்லா 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Friday, December 19, 2025, 9:42 [IST]
Other articles published on Dec 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+