Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் கிடையாது.. மும்பை அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.. காரணம் என்ன தெரியுமா?

மும்பை: ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்திய அணி அதற்கு தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்காவுடன் பலப்பரிட்சை நடத்துகிறது.

இந்த போட்டி டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறும். அதே சமயம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தற்போது முதல் பகுதி முடிவடைந்து இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சையது முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Suryakumar yadav

இந்த தொடர் நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான மும்பை அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என்று முதலில் செய்திகள் வெளியானது. ஆனால் தென்னாப்பிரிக்கா தொடர் நடைபெற இருப்பதால் சூரியகுமார் யாதவ் பெரும்பாலான போட்டிகளில் விளையாட மாட்டார்.

இதனால் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பை அணியில் நட்சத்திர வீரரான ரகானே, சிஎஸ்கே வீரர் சிவம் துபே, ஆயுஷ் மாத்ரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதேபோன்று சர்பராஸ் கானுக்கும் இடம் கிடைத்திருக்கிறது.

மும்பை அணி :
ஷர்துல் தாகூர் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ஆயுஷ் மாத்ரே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி, சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, சைராஜ் பாட்டீல், முஷீர் கான், சூர்யான்ஷ் ஷெட்கே, அதர்வ அங்கோலேகர், தனுஷ் கோட்டியன், ஷம்ஸ் முலானி, துஷார் தேஷ்பாண்டே, இர்ஃபான் உமைர், ஹர்திக் தமோரே.

இதனிடையே மகாராஷ்டிரா அணியும் தங்களது கேப்டனை அறிவித்திருக்கிறது.சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் தான் மகாராஷ்டிரா அணிக்கும் கேப்டனாக செயல்பட உள்ளார். பிரித்விஷா, ராகுல் திருப்பாதி, ஜலாஜ் சக்சேனா, ராஜ்வர்த்தன் ஹங்கேக்கர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மகாராஷ்டிரா அணி :
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), பிரித்வி ஷா, அர்ஷின் குல்கர்னி, ராகுல் திரிபாதி, அசிம் காசி, நிகில் நாயக், ராமகிருஷ்ணா கோஷ், விக்கி ஓஸ்வால், தனய் சங்கவி, முகேஷ் சவுதரி, பிரசாந்த் சோலங்கி, மந்தார் பண்டாரி, ஜலஜ் சக்சேனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், யோகேஷ் டோங்கரே, ரஞ்சித் நிகம்.

Story first published: Friday, November 21, 2025, 22:22 [IST]
Other articles published on Nov 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+