Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SMAT: 8 சிக்ஸர், 39 பந்தில் 87 ரன்.. மிரள வைத்த தமிழக வீரர் சாய் கிஷோர்.. குஜராத் டைட்டன்ஸ் குஷி

அகமதாபாத்: தமிழக வீரர் சாய் கிஷோர் சையத் முஷ்டாக் அலி தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்தை ஆடியுள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை தக்க வைத்து இருக்கிறது. இந்த நிலையில், தனது ஆல் ரவுண்டர் திறமையை நிரூபித்துள்ளார் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான எலைட் குரூப் டி ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் திரிபுரா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி ஆரம்பமே அதிர்ச்சி வைத்தியம் பெற்றது. வெறும் 26 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து படுமோசமான நிலையில் தத்தளித்தது.

SMAT 2025 Sai Kishore s Explosive 87 Runs Off 39 Balls For Tamil Nadu Proving All-Rounder Potential to Gujarat Titans

அப்போது 6-வது வீரராகக் களமிறங்கினார் சாய் கிஷோர். கேப்டன் நாராயண் ஜெகதீசனுடன் ஜோடி சேர்ந்த அவர், ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றினார். இருவரும் திரிபுரா பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜெகதீசன் 49 பந்துகளில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சாய் கிஷோர் ருத்ர தாண்டவம்

ஆனால், சாய் கிஷோர் நின்றபாடில்லை. வழக்கமாக பந்துவீச்சில் கலக்கும் அவர், இன்று பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுத்தார். வெறும் 39 பந்துகளைச் சந்தித்த அவர், ஆட்டமிழக்காமல் 87 ரன்களைக் குவித்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 8 இமாலய சிக்ஸர்கள் அடங்கும்.

குறிப்பாக கடைசி ஓவரில், இந்திரஜித் தேப்நாத் வீசிய பந்துவீச்சில் தொடர்ந்து ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி இன்னிங்ஸை முடித்து வைத்தார். இதற்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் சாய் கிஷோரின் அதிகபட்ச ஸ்கோர் வெறும் 21 ரன்கள் தான். ஆனால் இன்று 87 ரன்கள் விளாசி தான் ஒரு முழுமையான ஆல்-ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார்.

இவரது அதிரடியால் தமிழக அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. திரிபுரா அணி 18.5 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தமிழ்நாடு அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி!

2025 ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்காக 15 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியவர் சாய் கிஷோர். இதன் காரணமாக 2026 சீசனுக்காக சுப்மன் கில், சாய் சுதர்சன், முகமது சிராஜ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருடன் இவரும் தக்கவைக்கப்பட்டார்.

ஒரு பவுலராக தக்கவைக்கப்பட்ட அவர், தற்போது பேட்டிங்கிலும் இவ்வளவு பலம் வாய்ந்தவர் என்பதை நிரூபித்திருப்பது குஜராத் அணி நிர்வாகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு ஃபினிஷராகவும் இவரைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்த இன்னிங்ஸ் விதைத்துள்ளது.

Story first published: Friday, December 5, 2025, 7:52 [IST]
Other articles published on Dec 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+