Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சையது முஸ்டாக் அலி 2025: சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் மிரட்டல் பேட்டிங்.. 11வது ஓவரிலேயே முடிந்த போட்டி

லக்னோ: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டலான கம் பேக்கை கொடுக்கப்போவது உறுதியாகிவிட்டது. ஏனென்றால் அந்த அணியில் இருக்கும் டாப் 3 வீரர்கள் அனைவரும் சையது முஸ்டாக் அலி தொடரில் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் உர்வில் பட்டேல், ஆயுஸ் மாத்ரே ஆகியோர் அதிரடி சதத்தை அடித்து உள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து தற்போது சிஎஸ்கே அணிக்கு வந்திருக்கும் சஞ்சு சாம்சனும் சையது முஸ்டாக் அலி தொடரில் பட்டையை கிளப்பி இருக்கிறார். லக்னோவில் இன்று சத்தீஸ்கர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் கேரள அணி சார்பாக சஞ்சு சாம்சன் களமிறங்கி வெறும் 15 பந்துகளில் 43 ரன்கள் அடித்திருக்கிறார்.

samson

இதில் 5 சிக்சர், இரண்டு பவுண்டரி அடங்கும். இதில் சஞ்சு சாம்சன் ஸ்ட்ரைக் ரேட் 286 என்ற அளவில் இருந்தது. சஞ்சு சாம்சனை கட்டுப்படுத்த முடியாமல் சத்தீஸ்கர் பவுலர்கள் தடுமாறினர். சத்தீஸ்கர் அணி நிர்ணயித்த 121 ரன்கள் என்ற இலக்கை கேரள அணி 10.4 ஓவரிலே எட்டியது.

மறுமுனையில் ரோகன் குன்னம்மாள் 17 பந்துகளில் 33 ரன்களும், சல்மான் நிசார் 16 ரன்களும், விஷ்ணு வினோத் 22 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக சஞ்சு சாம்சன் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

தற்போது கில் காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் டி20 அணியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தான் தயாராக இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காகவே சஞ்சு சாம்சன் இன்று 5 சிக்ஸர்களை விளாசி அசத்திருக்கிறார்.

இதன் மூலம் அபிஷேக் ஷர்மாவுக்கு கொஞ்சமும் குறை இல்லாத பேட்ஸ்மேன் தான் நானும் என்பதை நிரூபித்து இருக்கிறார். இதனால் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் விட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எது எப்படி போனாலும் சிஎஸ்கே அணிக்கு இது ட்ரிபிள் டமக்கா தான்.

Story first published: Sunday, November 30, 2025, 14:21 [IST]
Other articles published on Nov 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+