Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சையது முஸ்டாக் அலி டி20 .. 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி புதிய சாதனை.. பிரித்வி பதிலடி

கொல்கத்தா: சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி 61 பந்துகளில் 108 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் இந்தத் தொடர் வரலாற்றில் சதம் விளாசிய மிக இளம் வயது வீரர் என்று பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பு விஜய் சோல் என்ற வீரர் தனது 18 வயதில் சதம் அடித்திருந்த நிலையில் தற்போது வைபவ் சூர்யவன்ஷி 14 வயதிலேயே சதம் அடித்து இந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Vaibhav suryavanshi

இதனை அடுத்து களமிறங்கிய பீகார் அணியில் தொடக்க வீரர் விபின் சௌரப் நான்கு ரன்களிலும், பியூஷ் சிங் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.எனினும் மறுமுனையில் முதலில் பொறுப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்சி பின்னர் அதிரடி காட்டினார்.

ஏழு பவுண்டரி, ஏழு சிக்ஸர் என பறக்க விட்ட அவர் 61 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 177 என்ற அளவில் இருந்தது. கடைசி வரை அவர் ஆட்டம் இழக்காமல் நின்றார்.இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பீகார் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்தது.

ஆகாஷ்ராஜ் 26 ரன்களும், ஆயுஷ் 25 ரன்களும் எடுக்க பீகார் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. முன்னாள் சிஎஸ்கே வீரர் ராஜவர்தன் ஹங்கேர்க்கர் நான்கு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கொடுத்து 35 ரன்கள் எடுத்திருந்தார்.இதனை அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் மகாராஷ்டிரா அணி களம் இறங்கியது.

கேப்டனாக விளையாட பிரித்வி ஷா அதிரடியை காட்டினார். 11 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 பந்துகளில் அவர் 66 ரன்கள் குவித்தார். இதேபோன்று நிராஜ் 30 ரன்களும், ரஞ்சித் நிக்காம் 27 ரன்களும், நிக்கில் நாயக் 22 ரன்களும் எடுக்க 19 புள்ளி ஒரு ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து மகாராஷ்டிரா அணி 182 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. பிரித்வி ஷாவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

Story first published: Tuesday, December 2, 2025, 19:47 [IST]
Other articles published on Dec 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+