Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சையது முஸ்தாக் அலி டி-20 காலிறுதி.. நேருக்கு நேர் மோதும் தமிழ்நாடு - கேரளா.. பெரும் எதிர்பார்ப்பு!

டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு பிறகு டி-20 போட்டிகளுக்கு என பிரதானமாக பி.சி.சி.ஐ.யால் நடத்தப்படும் தொடர் தான் சையது முஸ்தாக் அலி தொடர்.

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் ஐ.பி.எல். அணிகளின் கவனத்தை ஈர்த்து, ஏலத்தில் விலை போக முடியும். அதனாலேயே இந்த தொடரில் தங்களது திறமையை காட்ட முயற்சிப்பார்கள்.

2021ஆம் ஆண்டின் சையது முஸ்தாக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாளை டெல்லியில் காலை 8.30 மணிக்கு நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் தமிழ் நாடு அணியும், கேரளாவும் மோதுகின்றன.

 தமிழ் நாடு அணி

தமிழ் நாடு அணி

ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தலைமையிலான தமிழ் நாடு அணி நல்ல பார்மில் உள்ளது. குரூப் சுற்றில் 5 போட்டிகளில் விளையாடிய தமிழ்நாடு அணி நான்கு போட்டியில் வென்று ஏ பிரிவில் முதலிடத்தில் நிறைவு செய்தது, கோவாவுடன் மட்டும் தோல்வியை தழுவியது. தமிழக அணியில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சாய் கிசோர், முகமது ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ஆனால் அனைவரின் கவனமும் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் மீதே உள்ளது.

உத்தேச அணி

உத்தேச அணி

நாளை நடைபெறும் காலிறுதியில் களமிறங்கும் தமிழக அணி உத்தேசமாக 1,ஜெகதீசன்,2ஹரி நிஷாந்த 3, பாபா அப்ரஜித்,4. விஜய் சங்கர், 5. ஷாரூக்கான் 6, சஞ்சய் யாதவ், 7. நடராஜன், 8. முகமது 9, சாய் கிஷோர், 10.எம்.அஸ்வின், 11.சந்தீப் வாரியர்

கேரளா அணி

கேரளா அணி

டி பிரிவில் இடம்பிடித்துள்ள கேரளா அணி விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வென்று 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. தற்போது அந்த அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வென்று நல்ல பார்மில் உள்ளது. கேரள அணியில் சஞ்சு சாம்சன், அசாருதீன், ஜலாஜ் சக்சேனா, மிதுன் ஆகியோர் தமிழக அணிக்கு நெருக்கடியை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

சையது முஸ்தாக் அலி தொடரில் இவ்விரு அணிகளுக்கு இடையே கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் தமிழ்நாடு அணி நான்கு போட்டியில் வென்றுள்ளது. டெல்லி ஜெட்லி மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 10 போட்டியில் டாஸ் வேறு சேஸிங் செய்த அணியே 8 முறை வெறுள்ளது. இதனால் நாளைய போட்டியில் டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Story first published: Wednesday, November 17, 2021, 19:56 [IST]
Other articles published on Nov 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+