Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கப் பெண் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஐசிசி சிறந்த ஒருநாள் போட்டியாளர் விருது.. மாபெரும் சாதனை

மும்பை: இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் ஒருநாள் போட்டி வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 2024-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஸ்மிருதி மந்தனா 13 இன்னிங்ஸில் 747 ரன்கள் சேர்த்து இருந்தார்.

2024 ஆம் ஆண்டில் அவரே மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீராங்கனையாக இருந்தார். லாரா வொல்வடார்ட் 697 ரன்கள், டாம்மி பியமௌன்ட் 554 ரன்கள், ஹேலி மேத்யூஸ் 469 ரன்கள் எடுத்து அடுத்த இடங்களில் உள்ளனர்.

smiriti mandana icc women odi

2024 ஆம் ஆண்டில் மட்டும் ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளில் நான்கு சதங்கள், மூன்று அரை சதங்கள் அடித்து இருந்தார். அவரது பேட்டிங் சராசரி 57.46 என்பதாக இருந்தது. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட்டர் விருது, ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி கிரிக்கெட்டர் விருது, 2021 ஆம் ஆண்டின் ஐசிசி கிரிக்கெட்டர் ஆகிய விருதுகளை ஸ்மிருதி மந்தனா வென்று இருந்தார்.

தற்போது மீண்டும் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் ஒருநாள் போட்டி கிரிக்கெடர் விருதையும் அவர் வென்று இருக்கிறார். இந்திய அளவில் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஐசிசி விருதுகளை வென்ற சாதனையை செய்து இருக்கிறார் ஸ்மிருதி மந்தனா.

2024 ஆம் ஆண்டிற்கான ஆடவர் ஒருநாள் போட்டிகள் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆல் ரவுண்டரான அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக 2024 ஆம் ஆண்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் அணி ஐந்து ஒருநாள் தொடர்களில், நான்கு தொடர்களை வென்று இருந்தது. அதற்கு அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது. அவர் 2024 ஆம் ஆண்டில் 12 இன்னிங்ஸ்களில் 417 ரன்கள் குவித்து இருந்தார். ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்களை அடித்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 52.12 என்பதாக இருந்தது. அதேபோல பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட அவர் 13 இன்னிங்ஸில் 17 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவரது பவுலின் சராசரி 20.47 என்பதாக இருந்தது.

Story first published: Monday, January 27, 2025, 15:52 [IST]
Other articles published on Jan 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+