For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த நொடி.. தேசிய கொடியை ஏற்றிய போது கண்ணீரே வந்து விட்டது.. மகளிர் அணி கேப்டன் மந்தனா உருக்கம்

ஹாங்சோ : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 தொடரில் வென்று தங்கப் பதக்கம் வென்றது.

மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தங்கம் வென்ற பின் தான் அதை எப்படி உணர்ந்தேன் என்பது பற்றி கூறிய போது, தேசியக் கொடியை ஏற்றிய போது தனக்கு கண்ணீர் வந்துவிட்டது என்றார். அது பற்றி அவர் பேசியது உருக்கமாக இருந்தது முன்னதாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

Smiriti Mandhana in tears after winning Gold in Womens cricket Asian Games 2023

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டு விட்ட பின்னரும், இந்திய அணி அந்த தொடரில் ஆடவில்லை. ஆனால், இந்த ஆண்டு நிச்சயம் மகளிர் கிரிக்கெட் அணியையும், ஆண்கள் கிரிக்கெட் அணியையும் அனுப்பியே ஆக வேண்டும் என்ற நிலையில் பிசிசிஐ, இரு அணிகளையும் அனுப்பியது.

மகளிர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்பட்டார். இந்த தொடரில் இந்திய அணி காலிறுதியில் மழை பெய்ததால் நேரடியாக அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரை இறுதியில் வங்கதேச அணியை சந்தித்த இந்தியா, எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அப்போதே இந்திய அணிக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியானது. இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணியை சந்தித்தது இந்திய அணி. அந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீராங்கனை டிடாஸ் சாது சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 117 ரன்களே எடுத்த நிலையில், அதை சிறப்பாக தடுத்து ஆடி இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் மூலம் இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது. இதுவே கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்கம்.

தங்கம் வென்ற பின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சார்பாக பதக்கம் அணிவித்த பின், பதக்கம் வென்ற நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்படும். அப்போது தான் கண்ணீரில் மிதந்ததாக கூறி இருக்கிறார் ஸ்ம்ருதி மந்தனா.

"இது மிகவும் சிறப்பானது. நான் இதை தொலைக்காட்சியில் தான் பார்த்து இருக்கிறேன். முன்பு நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற போது நான் கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருந்தேன். அப்போது தொலைக்காட்சியில் பார்த்தேன். ஆனால், இப்போது நம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விதம், பின் தேசியக் கொடியை ஏற்றிய விதம் எல்லாம் பார்த்து நான் கண்ணீரில் மிதந்தேன்" என்றார் மந்தனா.

Story first published: Tuesday, September 26, 2023, 7:51 [IST]
Other articles published on Sep 26, 2023
English summary
Smiriti Mandhana in tears after winning Gold in Women's cricket Asian Games 2023.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+