
குற்றச்சாட்டு
அப்படிப்பட்ட ஒருவர், இங்கிலாந்து அணி மீது ஒட்டுமொத்த குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறது. அதனால் கிரிக்கெட் உலகமே அதிர்ந்து கிடக்கிறது. ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

ஸ்மித் சாதனை
அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் 211 ரன்கள் குவித்து ஒரே அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினை பின் தள்ளி முன்னேறினார். ஆர்ச்சரின் அந்த அடி, அதன் வலி மறைந்து போனாலும், அந்த சம்பவம் இனி மறக்கப்படாது என்றே சொல்லலாம்.

சிரமமாக இருந்தது
காயத்தில் இருந்து மீண்டு வந்து 3வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து இங்கிலாந்தை அசர வைத்தார். போட்டி முடிந்த பின் ஸ்டீவ் ஸ்மித் கூறியது தான் அடுத்தக்கட்ட பரபரப்பு. அவர் கூறியதாவது: லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பவுலர்கள் வீசிய பந்துகள் மேலே எகிறி வந்தது. அதனை எதிர்கொள்ள சிரமாக இருந்தது.

கையை பதம் பார்த்தது
பெரும்பலான பந்துகள் ஸ்டம்ப்புகளை நோக்கி வரவில்லை. மாறாக, பவுன்சர்களாகவே பறந்து வந்தன. ஸ்டுவர்ட் பிராட் , நல்ல லென்த்தான பந்துகளை வீசி நிறைய இன்சைடு எட்ஜுகளை வாங்க வைத்தார். அவருடைய பந்துகள் ஆரம்ப கட்டத்தில் எதிர்கொள்ள சிரமமாக இருந்தது. பெரும்பாலான பந்துகள் கையை பதம் பார்த்தது.

மிக்க மகிழ்ச்சி
ஹெட்டிங்கிலே டெஸ்டில் பங்கேற்காதது மிகவும் வருத்தம் அளித்தது. ஆனால் அடுத்து வரக்கூடிய நாட்களில் என்னை நானே முழுமையாக தயார்படுத்திக் கொண்டேன். அதுவே நான் மீண்டெழ காரணம். இப்போது இரட்டை சதம் அடித்திருக்கிறேன். அது மிக்க மகிழ்ச்சி என்றார்.


Click it and Unblock the Notifications











