For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் முறையாக..! ஆர்ச்சரால் அரங்கேறிய அந்த சம்பவம்..!

Recommended Video

Smith floored by Archer| ஸ்மித் காயத்தால் ஏற்பட்ட சர்ச்சை... பதறிய ஆர்ச்சர்

லண்டன்: காயத்தால் ஸ்மித் வெளியேறிய போது, அவருக்கு பதிலாக மாற்று வீரர் இறங்கி பேட்டிங் செய்த வரலாற்று நிகழ்வு ஆஷஸ் தொடரில் அரங்கேறி இருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. 2வது போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் அரங்கேறிய அதிசய நிகழ்வு பற்றிய செய்திதான் தற்போது வைரலாகி இருக்கிறது. அது, ஐசிசி சில மாதங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகள் தொடர்பான ஒரு விதியை கொண்டு வந்தது.

திட்டம் போட்டு அப்படி பண்ணிய அந்த வீரர்..? ரசிகர்கள் சந்தேகம்..! கையை பிசையும் கிரிக்கெட் வாரியம் திட்டம் போட்டு அப்படி பண்ணிய அந்த வீரர்..? ரசிகர்கள் சந்தேகம்..! கையை பிசையும் கிரிக்கெட் வாரியம்

மாற்று வீரர்

மாற்று வீரர்

அதாவது போட்டியின் போது வீரர்கள் காயத்தால் வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக இறங்கும் மாற்று வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யலாம் என்பதாகும். அந்த விதிப்படி முதன் முதலாக களமிறங்கிய வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் மார்னஸ் லாபுசாக்னே பெற்றார்.

ஸ்மித் காயம்

ஸ்மித் காயம்

முதல் இன்னிங்சில் விளையாடிய போது ஆர்ச்சரின் பந்துவீச்சில் காயம் அடைந்து வெளியேறினார். அதன் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் 2வது இன்னிங்சில் அவர் விளையாட வரவில்லை.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

அவருக்கு பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினார். 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த அவர் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாற்றுவீரராக களமிறங்கி பேட் செய்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் பெற்றிருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Story first published: Monday, August 19, 2019, 14:28 [IST]
Other articles published on Aug 19, 2019
English summary
Smith injured and marnus labuschagne played as concussion replacement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X