சட்ட கிழிஞ்சிருத்தா, தச்சி முடிச்சிடலாம்! இது தான் ஸ்மிருதி மந்தனாவின் காதலன்.. யார் இவர்?
மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட்டின் அழகு தேவதையாக அறியப்படுபவர் ஸ்மிருதி மந்தனா. நடிகை ராஷ்மிகா மந்தனாவையே தோற்கடிக்கும் அளவுக்கு ரசிகர்கள் படை இவருக்கு உண்டு. பார்ப்பதற்கு பூ போல் இருந்தாலும் களத்தில் கிரிக்கெட் விளையாடினால் ஜான்சி ராணி போல் செயல்படுவார்.
அந்த அளவுக்கு ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் ஒரு முக்கிய தூணாக விளங்கும் ஸ்மிருதி மந்தனாவுக்கு வயது 27 ஆகின்றது. இதுவரை 85 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3585 ரன்கள், 135 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 326 ரன்களும், ஏழு சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடி 629 ரன்களையும் மந்தனா அடித்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்காக ஒன்பது சதம், 53 அரை சதம் மந்தனா அடித்திருக்கிறார். இந்த நிலையில் அழகு தேவதை போல் வலம் வரும் ஸ்மிருதி மந்தனாவை நம்ம பசங்க ஒன் சைடாகவே லவ் செய்து வந்தனர். மந்தனாவை சிங்கிள் என நினைத்துக் கொண்டு அவரை பலர் பின் தொடர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தான் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஒரு காதலன் இருக்கிறார் என்பதே தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இவர்கள் இருவரும் ஐந்து ஆண்டுகள் காதலித்து வந்ததை தற்போது புகைப்படம் போட்டு கொண்டாடி இருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் பல ரசிகர்களின் இதயம் நொறுங்கி இருக்கிறது.
இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் போட்டு சட்ட கிழிஞ்சி இருந்தால் தச்சு முடிச்சிடலாம், நெஞ்சு கிழிஞ்சி இருக்கு எங்கு முறையிடலாம் என்ற பாடலை போட்டு பிலிங்கிசில் இருக்கிறார்கள். ஸ்மிருதியின் காதலனான பலாஸ் முச்சால் என்ற இந்த இளைஞர் ஒரு இசையமைப்பாளர். 29 வயதான பலாஸ் பல்வேறு இசை ஆல்பங்களை செய்திருக்கிறார்.
இவரிடம் பியானோ வாசித்து கற்பதற்காக ஸ்மிருதி மந்தனா வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் பலரும் பலாசை பார்த்து பொறாமைப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் வாழ்த்துகள் நண்பா என்று பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications