For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங்கிலும் டாப்.. பௌலிங்கிலும் டாப்.. இந்திய அணியின் நம்பிக்கை நாயகிகள் ஸ்மிருதி, ஜூலன் அசத்தல்!

துபாய்: இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஒருநாள் தரவரிசையில் முதல் இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர்.

இந்திய மகளிர் அணி சமீபத்தில் முக்கிய தொடர்களில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இந்திய அணியின் முன்னணி வீராங்கனைகள் இருவரும் முதல் இடங்களை பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து தொடரில் 8 விக்கெட்

இங்கிலாந்து தொடரில் 8 விக்கெட்

ஜூலன் கோஸ்வாமி இந்திய மகளிர் அணியின் மூத்த வீராங்கனை ஆவார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் எட்டு விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம், தரவரிசையில் ஏற்றத்தை பெற்றுள்ளார்.

மீண்டும் முதல் இடம்

மீண்டும் முதல் இடம்

கடைசியாக பிப்ரவரி 2017இல் ஒருநாள் போட்டி மகளிர் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஜூலன் கோஸ்வாமி, அதன் பின் தற்போது தான் முதல் இடத்துக்கு மீண்டும் வந்துள்ளார்.

ஜூலன் கோஸ்வாமி எடுத்த விக்கெட்கள்

ஜூலன் கோஸ்வாமி எடுத்த விக்கெட்கள்

ஜூலன் கோஸ்வாமி தற்போது ஒருநாள் போட்டிகளில் 218 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதுவே மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் ஆகும். நீண்ட காலமாக அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் கோஸ்வாமி முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

ஸ்மிருதி மந்தனா முதல் இடம்

ஸ்மிருதி மந்தனா முதல் இடம்

இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா புதிய உயரங்களை தொட்டு வருகிறார். மிகவும் நம்பகமான வீராங்கனையாக வலம் வரும் ஸ்மிருதி, ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் நீடித்து வருகிறார்.

மிதாலி, ஷிகாவும் உண்டு

மிதாலி, ஷிகாவும் உண்டு

இவர்கள் இருவர் தவிர இந்திய அணியில் பேட்டிங்கில் மிதாலி ராஜ் நான்காம் இடமும், பந்துவீச்சில் ஷிகா பாண்டே ஐந்தாம் இடமும் பிடித்துள்ளனர். இந்திய மகளிர் அணிக்கு டபுள்யூ.வி.ராமன் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்து இந்திய மகளிர் அணி வெற்றிகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 4, 2019, 17:32 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
Smriti Mandhana and Jhulan Goswami becomes No.1 in ODI ranking
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+