Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு இந்த மாதிரி பசங்க தான் பிடிக்கும்.. அவங்கள தான் திருமணம் செய்வேன்.. ஸ்மிருதி மந்தனா கருத்து

மும்பை : கிரிக்கெட் வீராங்கனைகளில் மிகவும் அழகானவர் திறமையானவர் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம் முதலிடத்தை ஸ்மிருதி மந்தனா பிடிப்பார். 27 வயதான ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 200க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை அடித்திருக்கிறார்.

ஸ்மிருதி மந்தனாவுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர் ஒருவர் ஸ்மிருதி மந்தனாவிடம் கேள்வி கேட்டார்.

Smriti Mandhana reveals about what are the Qualities he expects from her future husband

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் இசான் கிசனுடன் ஸ்மிருதி மந்தனா பங்கேற்றார். அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஆண் ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு எந்த மாதிரி குணம் உடைய ஆண்களை மிகவும் பிடிக்கும் என்று கூறினார். இதற்கு அமிதாப்பச்சன் அந்த ரசிகரை பார்த்து உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று கேட்டார்.

அதற்கு அந்த ரசிகர் எனக்கு இன்னும் ஆகவில்லை. அதனால் தான் நான் இந்த கேள்வியை ஸ்மிருதி மந்தனாவிடம் கேட்கிறேன் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த ஸ்மிருதி மந்தனா, நான் இது போன்ற ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் திருமணம் செய்ய போகும் நபர் நல்ல பையனாக இருக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.

அவர் என்னை எப்போதுமே கவனித்துக் கொள்ள வேண்டும். என்னுடைய விளையாட்டு குறித்து அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு குணங்களை தான் நான் ஆண்களிடம் எதிர்பார்க்கிறேன். ஒரு பெண்ணாக என்னால் என் கணவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியாது. அதையும் அவர் புரிந்துகொண்டு என்னை கவனித்துக் கொள்ள வேண்டும். இதுதான் நான் முக்கியமாக பார்க்கக் கூடியது என்றும் ஸ்மிருதி மந்தனா பதிலளித்தார்.

இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவினாலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது. இதில் முதல் போட்டி டிசம்பர் 28ஆம் தேதியும்,இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 30ஆம் தேதியும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஜனவரி 2ஆம் தேதியும் மும்பையில் நடைபெறுகிறது. இது முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 5 ,7 மற்றும் எட்டாம் தேதி நவி மும்பையில் நடைபெறுகிறது.

Story first published: Wednesday, December 27, 2023, 12:54 [IST]
Other articles published on Dec 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+