பாபர் அசாமை விட பல மடங்கு சம்பளம்.. மகளிர் பிரீமியர் லீக்கில் இந்திய வீராங்கனைகள் அசத்தல்.. விவரம்
மும்பை : மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு அவ்வளவு ஏன், உலகில் உள்ள மற்ற வீராங்கனைகளுக்கும் ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.
டென்னிஸ், ஓட்டப் பந்தயம் நீங்கலாக , எந்த விளையாட்டை எடுத்து கொண்டாலும், அதில் ஆடவர்களை விட மகளிர் வீராங்கனைகள் குறைந்த அளவில் தான் சம்பளம் வாங்குவார்கள்.
அதிலும் கிரிக்கெட்டில் சொல்லவே தேவையில்லை. ஆடவர் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதம் கூட மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கிடைக்காது. தற்போது மகளிர் ஐபிஎல் என்று கூறப்படும், மகளிர் பிரிமீயர் லீக். இது அனைத்தையும் மாற்றி விட்டது.

இரு மடங்கு அதிகம்
மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை 3 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து பெங்களூரு அணி ஏலத்தில் வாங்கியது. இதன் மூலம் ஸ்மிருதி மந்தனா ஒரே நாளில் கோடீஸ்வரியாக மாறிவிட்டார். இது மட்டுமல்ல, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பாபர் அசாம் வாங்கும் ஊதியத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

பிக் பேஷ் லீக்
பாபர் அசாம் 2023 பிஎஸ்எல் தொடரில் ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் தான் சம்பளம் வாங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஸ் லீக் தொடரில் 2 கோடியே 13 லட்சம் ரூபாய் வாங்கும் டார்சி ஷார்ட் தான் அதிக சம்பளம் வாங்கும் வீரர் ஆவார். அவரை விட ஸ்மிருதி மந்தனா தற்போது அதிக சம்பளம் வாங்கி உள்ளார்.

ஆஷ்லி கார்ட்னர்
இதே போன்று பிக் பேஸ் லீக் தொடரில் அதிக ஊதியம் வாங்கும் ஆடவர்களை விட மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் கார்டனரும், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நாட்சிவரும் 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார்கள்.

நிலைமை மாறியது
இது , மீண்டும் பிக் பேஷ் தொடரில் அதிக விலைக்கு சென்ற ஆடவர்களை விட தற்போது ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அதிக ஊதியம் வாங்குகிறார்கள். ஆஸ்திரேலிய வீராங்கனைளுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு 3 கோடி ரூபாய் வருமானத்தை 10 பேர் பிரித்து கொண்டனர். ஆனால் ஆஷ்லிக் கார்ட்னர், அந்த மொத்த தொகையை விட அதிக சம்பளம் பெற்றுள்ளதாக ஆஸ்திரலிய ஊடகங்கள் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications