Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெண்கள் டி 20 தொடரில் அபாரம்… 90 ரன்கள் விளாசிய மந்தனா..! டிரெய்ல்பிளாசர்ஸ் த்ரில் வெற்றி

ஜெய்பூர்: மகளிருக்கான டி 20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில், டிரெய்ல்பிளாசர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மகளிர் ஐபிஎல் போட்டிக்கு முன்னோட்டமாக முதல் முறையாக இத்தொடர் தொடங்கப் பட்டுள்ளது. டிரெய்ல்பிளாசர்ஸ், சூப்பர் நோவாஸ், வெலாசிட்டி என 3 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடரின் முதல் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

Smriti mandhana stars as trailblazers beat supernovas in a thrilling opener

போட்டியில் டிரெய்ல்பிளாசர்ஸ் அணி, சூப்பர்நோவாஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய டிரெய்ல்பிளாசர்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 67 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.

பின்னர், இலக்கை துரத்திய சூப்பர்நோவாஸ் அணி, சீராக ரன்களை சேர்த்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கோஸ்வாமி வீசிய அந்த ஓவரை, ஹர்மன்பிரீத் கவுர் எதிர்கொண்டார்.

அவர், 5 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை. மைதானத்தில் பரபரப்பு நிலவியது. தஹுஹு ரன் அவுட் ஆனதால், சூப்பர்நோவாஸ் அணி எதிர்பாராத விதமாக தோல்வியுற்றது. ஆட்ட நாயகியாக ஸ்மிரிதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த போட்டி 8ம் தேதி டிரெய்ல்பிளாசர்ஸ், வெலாசிட்டி அணிகளுக்கு இடையே நடக்கிறது.

Story first published: Tuesday, May 7, 2019, 14:53 [IST]
Other articles published on May 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+