ஸ்மிருதி மந்தனாவின் ரோல் மாடல் எந்த இடது கை பேட்ஸ்மேன்-னு தெரியுமா?
லண்டன்: கியா பெண்கள் சூப்பர் லீக் டி2௦ தொடரில் கலக்கி வரும் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தான் எந்த பேட்ஸ்மேனை லட்சியமாக பின்பற்றுகிறேன் என தெரிவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்கள் யாரையாவது நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.
அவரது லட்சிய வீரர் இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா. இது பற்றி பிசிசிஐ டிவி-க்கு அளித்த பேட்டியில் சில தகவல்களை கூறி இருக்கிறார்.

“நான் டிவியில் கிரிக்கெட் பார்க்க தொடங்கியது முதல் சங்ககாராவின் தீவிர ரசிகை. என்னுடைய பேட்டிங் சிறப்பாக இல்லையென்றால், நான் அவர் பேட்டிங் ஆடும் வீடியோக்களை பார்ப்பேன்” என கூறி இருக்கிறார் மந்தனா.
தற்போது கியா சூப்பர் லீகில் ஆடி வரும் மந்தனா, அந்த தொடரின் ஒளிபரப்பில் வர்ணனையாளராக செயல்படும் சங்ககாராவிடம் தான் பேசியதை பற்றி குறிப்பிட்டார். அப்போது, மந்தனா, சங்ககாராவிடம் தன் பேட்டிங்கில் ஏதும் தவறுகள் உள்ளதா என கேட்டதாக கூறினார். அதற்கு பதில் அளித்த சங்ககாரா மந்தனா சிறப்பாகவே ஆடி வருவதாகவும், எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என கூறி இருக்கிறார்.
கியா சூப்பர் லீக் தொடரில் ஏழு இன்னிங்க்ஸ்களில் 387 ரன்கள் மற்றும் 185 ஸ்ட்ரைக்ரேட் வைத்திருக்கிறார் மந்தனா. இதே தொடரில் அதிவேக அரைசதம் அடித்த சாதனையும் செய்துள்ளார்.
அடுத்து நவம்பர் மாதம் உலக பெண்கள் டி20 தொடர் நடைபெற உள்ளது. அப்போதும் இதே பார்மில் ஆட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Story first published: Thursday, August 16, 2018, 9:18 [IST]
Other articles published on Aug 16, 2018


Click it and Unblock the Notifications