தோனிக்கு பதிலா தினேஷ் கார்த்திக்கா? ஒர்க் அவுட்டாகாது… தெறிக்க விட்ட டுவிட்டர்
மும்பை: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தோனி இல்லாத போது, தினேஷ் கார்த்திக் களம் இறங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது, எந்தளவுக்கு எடுபடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கிறது. தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக அனைவரும் எதிர்பார்த்தது போலவே... விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உலக கோப்பையில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்தவர்கள் இல்லை
பலரும் எதிர்பார்த்த பல வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. இளம் வீரர்களை இன்னும் அணியில் சேர்த்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டுவிட்டர் கருத்து
இந்நிலையில், ஆகாஷ் சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தை பலரும் ஆமோதித்துள்ளனர். உலக கோப்பை தொடருக்கான அணி தேர்வை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
எதுவுமே தெரியவில்லை
இது குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: விஜய் சங்கரை பிசிசிஐ 4வது வீரராக தேர்வு செய்துள்ளது. எதுவே தெரியாமல் எப்படி இது சரியாகும்? தோனி இல்லாத போது தினேஷ் கார்த்திக் விளையாடுவார்.

குட்லக்
அணியில் 4 வது பவுலர் இல்லை. சுவாரஸ்யமான தேர்வு.. இது எப்படி ஒர்க் அவுட்டாகும்? ஆனாலும் இதை நான் நம்புகிறேன். குட் லக் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications