கோலி…!! உங்களுக்கு தான் ஸ்பின் பவுலிங் ஆட தெரியல.. என்ன பண்ண போறீங்க…? போட்டு தாக்கும் அந்த வீரர்
மும்பை:ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள கோலி ஏன் திணறி வருகிறார் என்று தெரியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளை காட்டிலும், பெங்களூர் அணி அதலபாதாளத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய எந்த போட்டியிலும் ஜெயிக்கவில்லை. மாறாக தோல்வி குறித்து ஆட்டத்துக்கு ஒருமுறை காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறது.
இதுவரை புள்ளிகள் பட்டியலில் சைபர் தான். யார் ஒழுங்காக விளையாடுகிறார்கள், யாருக்கு யார் மாற்று என்றே தெரியாமல் மண்டை காய்ந்து போயிருக்கின்றனர். என்ன பண்றதுன்னு.... அணியை எப்படி ஜெயிக்க வைக்கறதுன்னே தெரியல என்று போகும் இடம் எல்லாம் கோலி... கோவிந்தா புராணம் பாடி வருகிறார்.

பேட்டிங் குறித்து கேள்வி
இந்நிலையில் கோலியின் பேட்டிங் குறித்தே தற்போது கேள்வி எழுப்பி இருக்கிறார் ஒரு முன்னாள் வீரர். அவர் வேறும் யாருமல்ல... விவிஎஸ் லக்ஷ்மண் தான். அவர் கூறியிருப்பதாவது:

சுழற்பந்துவீச்சு
கோலியின் பேட்டிங்கை பார்க்கும் போது சில கேள்விகள் எழுகின்றன. அதிலும் அவர் ஸ்பின் பவுலிங்கில் திணறுகிறார். குறிப்பாக.. கூக்லி பந்துவீச்சை எதிர்கொள்வதில் பலவீனமாக இருக்கிறார்.

திணறும் கோலி
முஜீப், சாம்பா, மர்காண்டே ஆகியோர் பந்துவீச்சில் கூட கோலி ஆட்டமிழந்து இருக்கிறார். ஆக விராட் கோலி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பந்தை எதிர்கொள்ள திணறுகிறார். அதை திருத்திக் கொண்டு தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும்.

தோல்வி மேல் தோல்வி
இதுவரை பெங்களூர் அணி தாம் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை கண்டுள்ளது. அணியின் வெற்றி, தோல்வி என அனைத்துக்கும் கேப்டன் தான் பொறுப்பு. எனவே... ,இனி வரும் போட்டிகள் கோலிக்கு சவாலானது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications