Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் தமிழ்ல பேசுறீங்க.. இந்தில பேசுங்க.. அஸ்வினுக்கு கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடி.. எவ்வளவு திமிர்!

சென்னை: தமிழக வீரர் அஸ்வினை இந்தியில் பேசும்படி வடஇந்தியர்கள் சிலர் கமெண்ட் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

அஸ்வின்

அஸ்வின்

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார். அஸ்வின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்தார். அதேபோல் 48 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் எடுத்தார். அதேபோல் சதமும் எடுத்தார்.

ஆட்டநாயகன்

ஆட்டநாயகன்

இந்த நிலையில் அஸ்வினுக்கு நேற்று ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. இதையடுத்து அஸ்வின் நேற்று தனது யூ டியூப் பக்கத்தில் லைவ் வெளியிட்டு இருந்தார். நேற்று நடந்த மேட்ச் குறித்து அஸ்வின் லைவ் வீடியோவாக வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

போட்டி

போட்டி

போட்டியில் நடந்த சுவாரசியமான விஷயங்கள், வீரர்களுக்கு இடையே நடந்த உரையாடல், சர்ச்சைகள் என்று பல விஷயங்களுக்கு அஸ்வின் பதில் அளித்தார். மிகவும் சுவாரசியமாக அஸ்வின் பேசி இருந்தார். அஸ்வினின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோரிக்கை

கோரிக்கை

இந்த நிலையில் அஸ்வினின் இந்த வீடியோவில் வடஇந்தியர்கள் பலர் ஆங்கிலத்தில் பேசும்படி அஸ்வினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். அஸ்வின் பேசுவதை புரிந்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் வைத்த கோரிக்கை நியாயமானது. அதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலையில் அஸ்வினின் இந்த வீடியோவில் வடஇந்தியர்கள் பலர் ஆங்கிலத்தில் பேசும்படி அஸ்வினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். அஸ்வின் பேசுவதை புரிந்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் வைத்த கோரிக்கை நியாயமானது. அதை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தி எப்படி

இந்தி எப்படி

ஆனால் சில திமிர் பிடித்த நெட்டிசன்கள்.. அஸ்வினை இந்தியில் பேசுங்கள் என்று குறிப்பிட்டனர். ஏன் தமிழில் பேசுகிறீர்கள்..நீங்கள் இந்திய வீரர்..இந்தியில் பேசுங்கள் என்று கடுமையாக திமிராக கமெண்ட் செய்தனர். சிலர் தாழ்மையாக கோரிக்கை வைத்தாலும் பலர் திமிராக கமெண்ட் செய்திருந்தனர்.

அஸ்வின் கமெண்ட்

அஸ்வின் கமெண்ட்

அஸ்வினின் கமெண்ட் செக்சனில் இப்படி பல வடஇந்தியர்கள் கமெண்ட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஸ்வினுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இப்படி கமெண்ட் செய்யப்பட்டது. ஆனால் அஸ்வின் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கு பிடித்தபடி தமிழில் தொடர்ந்து பேசினார். அஸ்வினின் கமெண்ட் செக்சனில் இப்படி பல வடஇந்தியர்கள் கமெண்ட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஸ்வினுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இப்படி கமெண்ட் செய்யப்பட்டது. ஆனால் அஸ்வின் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கு பிடித்தபடி தமிழில் தொடர்ந்து பேசினார்.

Story first published: Wednesday, February 17, 2021, 13:49 [IST]
Other articles published on Feb 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+