தமிழ் கமெண்ட்ரியுடன் புதிய சேனல்.. ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு சவால் விடும் சோனி. சர்ஃப்ரைஸ் கொடுத்த ராணா!
மும்பை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சவால் கொடுக்க மற்றொரு நிறுவனம் தமிழில் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து, உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் அதிகளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஆங்கிலத்தில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் மாநில மொழிகளிலும் ஒளிபரப்பும் முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது அந்நிறுவனம்.

முக்கிய வெற்றி
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய வெற்றியாக ஐபிஎல் தொடரை சொல்லலாம். ஐபிஎல்-ஐ மாநில மொழிகளின் கமெண்ட்ரியுடன் ஒளிபரபரப்பு செய்து அசத்தியது. குறிப்பாக தமிழகத்தில் பல இல்லத்தரசிகளின் ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களை பார்க்க தொடங்கினர். இதனால் ஐபிஎல் நேரங்களில் அந்நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியில் கூட டிஆர்பி படுவேகமாக உயர்ந்தது.

சோனியின் அறிவிப்பு
இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு போட்டியாக சோனி டென் 4 நிறுவனம் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம் தற்போது மாநில மொழிகளின் கமெண்ட்ரியுடன் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பும் முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி ஆங்கிலம் தவிர்த்து இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் கமெண்ட்ரி
இதில் முதாலவதாக EURO கால்பந்து போட்டியும், கோபா அமெரிக்கா போட்டியும் மாநில மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதில் ஜூன் 11ம் தேதி தொடங்கும் EURO கால்பந்து தொடர் 6 மொழிகளில் ஒளிபரபரப்பு செய்யப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் WWE மல்யுத்த போட்டியும், இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணமும் தமிழ் கமெண்ட்ரியுடன் ஒளிபரபரப்பு செய்யப்படவுள்ளது.

தெலுங்கு நடிகர்
சோனி டென் 4 தமிழ் மற்றும் தெலுங்கு சேனல்களுக்கான விளம்பர தூதராக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை விளம்பர புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். மாநில மொழிகளில் கமெண்ட்ரி செய்வதில் இதுவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மட்டும் தான் இருந்த நிலையில் சோனி நிறுவனத்தின் வருகை அதற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications