Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி.. அவசர சிகிச்சை.. பரபர தகவல்!

கொல்கத்தா : பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன சவுரவ் கங்குலி, சனிக்கிழமை அன்று காலை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Recommended Video

#BREAKING கங்குலிக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

வலி வந்த உடன் கொல்கத்தா வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் விரைவாக அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெஞ்சு வலி

நெஞ்சு வலி

கங்குலி இன்று காலை வீட்டில் உடற்பயிற்சி செய்து வந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். கொல்கத்தா வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இருதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது.

இதயத்தில் அடைப்பு

இதயத்தில் அடைப்பு

கங்குலிக்கு சிறிய அளவில் இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது எப்போது வேண்டுமானாலும் பெரிய பிரச்சனையாக மாறலாம் என்பதால் மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

சிகிச்சை

சிகிச்சை

மருத்துவர் சரோஜ் மோண்டால் தலைமையில் மூவர் கொண்ட குழு இணைந்து அவருக்கு அந்த சிகிச்சையை செய்ய உள்ளனர். அவர் இன்று இரவுக்குள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடுவார் எனவும் கூறப்படுகிறது. அவர் தற்போது நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் கொல்கத்தா ஊடகங்கள் கூறி வருகின்றன.

குணமடைய வேண்டுதல்

குணமடைய வேண்டுதல்

கங்குலியின் நிலை அறிந்த உடன் கிரிக்கெட் உலகில் இருந்து அவருக்காக பிரார்த்தனை செய்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஐசிசி அமைப்பு, இந்திய அணி கேப்டன் விராட் கோலி உட்பட பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டி பதிவிட்டு உள்ளனர்.

Story first published: Saturday, January 2, 2021, 15:02 [IST]
Other articles published on Jan 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+