Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சவுரவ் கங்குலி, அவரது மனைவிக்கு கொலை மிரட்டல்.. 6 மாதமாக வந்த கடிதங்கள்.. போலீசார் தீவிர விசாரணை

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் அவரது மனைவி டோனா கங்குலி ஆகியோருக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கங்குலி அளித்த புகாரின் பேரில் கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலியின் அலுவலகத்திற்கு கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. ஆரம்பத்தில் இதனை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், நேற்று அவரது அலுவலகத்திற்கு வந்த 2 கடிதங்களில், கங்குலி மற்றும் அவரது மனைவி டோனா கங்குலியை கொலை செய்து விடுவதாகவும், அவர்களுக்கு நெருக்கமானவர்களை காயப்படுத்துவோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

Sourav Ganguly and Wife Dona receive threat letters Kolkata Police launch investigation

இதனைத் தொடர்ந்து, கங்குலியின் மேலாளர் தரப்பில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள தாகூர்புகூர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை அடுத்து கொல்கத்தா போலீசார் இந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கடிதங்கள் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பெல்காரியா பகுதியில் இருந்து கூரியர் சேவை மூலமாக அனுப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடிதங்களை அனுப்பிய நபர் பயன்படுத்திய மொபைல் போனின் சிம் கார்டு விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் இந்த புகாரை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளோம். கடிதம் அனுப்பப்பட்ட கூரியர் நிறுவனத்திடம் பேசி விவரங்களைச் சேகரித்துள்ளோம். மேலும், சந்தேகத்திற்குரிய ஒரு மொபைல் எண்ணை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என்றார்.

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் பதவியில் மெக்குல்லம்? போட்டியில் மேலும் 2 பேர்

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் பதவியில் மெக்குல்லம்? போட்டியில் மேலும் 2 பேர்

அனைத்து கடிதங்களும் ஒரே நபரால் அனுப்பப்பட்டதா அல்லது இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்து கொல்கத்தா போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை மிரட்டல் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, August 11, 2026, 8:00 [IST]
Other articles published on Aug 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+