Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தாதாடா.. ஹர்பஜன்சிங்கிடம் கூச்சப்படாமல் மன்னிப்பு கேட்ட கங்குலி!

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்கிடம் முன்னாள் கேப்டன் 'தாதா' கங்குலி ஒரு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

'வங்கப்புலி' கங்குலி டிவிட்டரில் கணக்கு வைத்திருந்தாலும், சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட மாட்டார். அப்படியும், ஹர்பஜன்சிங் தனது மனைவி, குழந்தையுடன் எடுத்துக்கொண்ட ஒரு படத்தை டிவிட்டரில் ஷேர் செய்திருந்ததை கங்குலி கவனித்துவிட்டார்.

வெகு நாட்கள் உடன் விளையாடிய வீரர் ஹர்பஜன்சிங் என்பதால் டிவிட்டரில் கங்குலி படத்திற்கு ரிப்ளை செய்தார்.

மகன் அழகு

பஜ்ஜி, உங்கள் மகன் ரொம்ப அழகாக இருக்கிறான். எனது அன்பை அவனுக்கு கொடுக்கவும் என்ற அர்த்தத்தில் ஹிந்தியில் கங்குலி டிவிட் செய்திருந்தார். ஆனால் அப்போதுதான் தனது தவறை கங்குலி உணர்ந்தார்.

பஜ்ஜியிடம் மன்னிப்பு கேட்ட தாதா

ஹர்பஜன்சிங்கின் மகளைத்தான், மகன் என தப்பாக, குறிப்பிட்டதை உணர்ந்த கங்குலி, உடனடியாக மற்றொரு டிவிட் செய்தார். "பஜ்ஜி, மன்னித்துக்கொள்ளவும். உங்கள் மகள் அழகாக இருக்கிறார். எனக்கு வயதாகிறதல்லவா" என்று கும்பிடுவதை போன்ற எமோஜி போட்டு டிவிட் செய்திருந்தார் கங்குலி.

தல போல வருமா

தனது ஆசான் கங்குலி தப்பாக குறிப்பிட்டதை பெரிதாக எடுத்துக்கொள்பவரா ஹர்பஜன்..? இல்லை. பதிலுக்கு ஹர்பஜன் ஒரு டிவிட் போட்டார். தாதா, உங்கள் ஆசிக்காக நன்றி. சனாவுக்கு (கங்குலி மகள்) அன்புகள். விரைவில் உங்களை சந்திக்க வேண்டும் என்று பதிலளித்திருந்தார்.

ஹர்பஜன் குடும்பம்

கிரிக்கெட்டின் இரு பெரும் ஜாம்பவான்களின் இந்த உரையாடலை நெட்டிசன்கள் வெகுவாக ரசிக்கிறார்கள். ஹர்பஜன்சிங், நடிகை கீதா பாஸ்ராவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு, ஹினாயா என்ற மகள் உள்ளார். ஹர்பஜன்சிங் குடும்பத்தோடு அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சென்றிருந்தார். அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

Story first published: Tuesday, November 21, 2017, 18:28 [IST]
Other articles published on Nov 21, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+