Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வீரர் வேறு என்ன தான் செய்யனும்.. இது மட்டும் செய்தால் இந்தியா வெல்லும்.. கங்குலி கருத்து

மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோன்று நியூசிலாந்திடம் இலங்கை அணி தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

தற்போது ஜூன் மாதம் 7ஆம் தேதி இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் எனக் கூறப்படுகிறது.

பாராட்டு

பாராட்டு

காரணம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடும் என்பதால் இந்திய அணிக்கு அது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு சாதகமாக கங்குலி பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் முதலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

400 ரன்கள்

400 ரன்கள்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வென்றிருக்கிறது. இதேபோன்று இங்கிலாந்து மண்ணிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஏன் மீண்டும் அவர்களால் வெல்ல முடியாது. முதலில் பேட்டிங் செய்து 350 முதல் 400 ரன்களை இந்திய அணி அடிக்க வேண்டும். அதன் பிறகு அந்த டெஸ்ட் போட்டியில் நீங்கள் வெல்லும் நிலையில் இருப்பீர்கள். தொடக்க வீரராக சுப்மன் கில் தான் களமிறங்க வேண்டும்.

சிறப்பான பணி

சிறப்பான பணி

ஏனென்றால் கடந்த ஆறு ஏழு மாதங்களாக இந்திய அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். இதை தவிர வேறு என்ன செய்ய முடியும். இந்திய அணியின் நிரந்தர வீரராக தற்போது சுப்மன் கில் இடம்பெற்று விட்டார். அஸ்வினும் , ஜடேஜாவும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். அக்சர் பட்டேல் பற்றி நீங்கள் பேசாமல் இருக்க முடியாது. பந்துவீச்சிலும் அவர் நல்ல பணியை செய்திருக்கிறார்.

பலமாக இருக்கிறது

பலமாக இருக்கிறது

பேட்டிங்களும் கீழ் வரிசையில் அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இந்த மூன்று பேரும் இந்திய அணிக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதுதான் தற்போது இந்திய அணியின் பலமாக இருக்கிறது. எனக்கு கண்டிப்பாக தெரியும் வெளிநாட்டு மண்களில் இந்த மூன்று பேரையும் சேர்த்து நாம் விளையாட வைக்க முடியாது. ஆனால் அதற்கான ஆயத்த கூறுகள் கண்டிப்பாக இருக்கின்றன என கங்குலி கூறியுள்ளார்.

Story first published: Wednesday, March 15, 2023, 18:43 [IST]
Other articles published on Mar 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+