Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பைக்கு பிறகும் தோனி விளையாடவேண்டும்.. கங்குலி ஆதரவு

கொல்கத்தா:2019ம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகும் தோனி விளையாட வேண்டும், விளையாடுவதற்கு திறமை இருந்தால் போதும் வயது முக்கியமல்ல என்று முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

உலககோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் தோனியின் திறமை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அவர் இந்த உலக கோப்பையுடன் ஓய்வை அறிவித்துவிட வேண்டும் என்றும், பலர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

Sourav ganguly backs dhoni to continue after world cup series

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேட்பன் சவுரவ் கங்குலி தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:உலக கோப்பை தொடரில் தோனி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் தொடருக்கு பின்னரும் விளையாட வேண்டும்.

உலக கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வென்று, தோனி சிறப்பாக விளையாடினால் அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும். விளையாடுவதற்கு திறமை இருந்தால் போதும் வயது முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில் கங்குலியின் கருத்து முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, March 8, 2019, 12:45 [IST]
Other articles published on Mar 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+