Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வாழ்க்கை முழுவதும் பதவியில் இருக்க முடியாது" ஜெய் ஷா மீது கங்குலி மறைமுக தாக்கு..பாஜகவினருக்கு பதவி

கொல்கத்தா : பிசிசிஐ தலைவராக இருந்த காலம் மகிழ்ச்சி அளித்ததாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி பங்கேற்ற போது இவ்வாறு கூறினார்.

பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோரின் பதவிக்காலம் அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மும்பையில் பிசிசிஐயின் கூட்டம் நடைபெற்றது.

இதில், கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் தொடர விரும்பினார். ஆனால் மற்ற நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள்

மேலும் கங்குலிக்கு ஐபிஎல் கமிட்டியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதனை பெற்று கொள்ள கங்குலி முன்வரவில்லை. இந்த நிலையில், பிசிசிஐயின் புதிய தலைவராக 1983ஆம் ஆண்டு உலககோப்பையை வென்ற ரோஜர் பின்னி பொறுப்பேற்க உள்ளார். இதே போன்று பாஜக எம்எல்ஏ ஆஷிஸ் செலாருக்கு பிசசிஐயின் பொருளாளர் பதவி வழங்கப்பட உள்ளது.

வேட்புமனு

வேட்புமனு

இந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் பதவியில் ஜெய்ஷா மட்டும் தொடர உள்ளார். ராஜிவ் சுக்லா பிசிசிஐ துணைத் தலைவராக பதவியேற்க உள்ளார். பிசிசிஐ பதவிக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு பரிசீலினை இன்று நடைபெறுகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற அக்டோபர் 14ஆம் தேதி கடைசி நாளாகும்.

கங்குலி கருத்து

கங்குலி கருத்து

இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்குலி, பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக 5 ஆண்டுகள் இருந்தேன். பிசிசிஐ தலைவராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன். இத்தனை ஆண்டகள் பதவியில் இருந்தால், விலகி செல்வது தான் சரியாக இருக்கும். ஒரு நிர்வாகியாக இந்திய அணியின் நலனுக்காக உழைக்க வேண்டும்.

மறைமுக தாக்கு

மறைமுக தாக்கு

இந்திய அணியின் வீரராக நீண்ட காலமாக இருந்ததால், ஒரு நிர்வாகி என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். பதவியில் இருந்த காலத்தில் நான் மகிழ்ச்சியாக செயல்பட்டேன். தொடர்ந்து எப்போதும் உங்களால் விளையாட முடியாது. அதே போல் பதவியிலும் நீடிக்க முடியாது என்று பதில் அளித்தார். ஜெய்ஷா செயலாளராக தொடரும் நிலையில், அவரை தாக்கும் விதமாக கங்குலி இவ்வாறு கூறி இருப்பதாக கருதப்படுகிறது.

Story first published: Thursday, October 13, 2022, 16:47 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+