Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ஆனதில் சர்ச்சை.. பிசிசிஐ உத்தரவு இருப்பதாக அவரே விளக்கம்!

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் எந்தவொரு ஆதாய முரண்பாடும் (Conflict of Interest) இல்லை என்றும், இதற்கு பிசிசிஐ அமைப்பின் முறையான உத்தரவு தன்னிடம் உள்ளதாகவும் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

2027 ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வீரர் ஹேமங் பதானிக்குப் பதிலாக இந்தப் பொறுப்பை ஏற்கிறார். அதேநேரத்தில் கங்குலி தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

Sourav Ganguly Clears The Air Over Conflict Of Interest After Being Named Delhi Capitals Head Coach

மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் ஒருவர், அதே நேரத்தில் ஒரு ஐபிஎல் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்படுவது விதிகளை மீறிய ஆதாய முரண்பாடு என்று கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு எழுந்தது. இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த சவுரவ் கங்குலியிடம் இந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நான் பொறுப்பேற்பதில் எவ்வித ஆதாய முரண்பாடும் கிடையாது. இதற்கான பிசிசிஐ குறைதீர்ப்பாளரின் அதிகாரப்பூர்வ உத்தரவு என்னிடம் உள்ளது. டெல்லி அணி புதிய சீசனில் மிகச் சிறப்பாக விளையாடும். இந்தப் பொறுப்பை நான் ஆர்வத்துடன் ஏற்கிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும், 2019 முதல் 2022 வரை சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தார். அப்போதும் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பதவியில் இருப்பது குறித்தும், கிரிக்கெட் ஃபேன்டசி சார்ந்த விளம்பரங்களில் நடித்து இருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அவர் மீண்டும் அதே போன்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

“அரசு வேலை தரேன்னு சொன்னாங்க”.. உலகக்கோப்பை வென்றும் தவிக்கும் பார்வையற்றோர் கிரிக்கெட் வீராங்கனைகள்

“அரசு வேலை தரேன்னு சொன்னாங்க”.. உலகக்கோப்பை வென்றும் தவிக்கும் பார்வையற்றோர் கிரிக்கெட் வீராங்கனைகள்

2019 முதல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகர் மற்றும் இயக்குநராக இருந்துள்ள சவுரவ் கங்குலி, ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தலைமை பயிற்சியாளராகக் களமிறங்க உள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக மோசமாக செயல்பட்டு வரும் நிலையில் கங்குலியின் வரவு அந்த அணிக்கு வெற்றிகளை தருமா? என்று பார்க்கலாம்.

Story first published: Wednesday, October 7, 2026, 10:30 [IST]
Other articles published on Oct 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+