For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாஜகவில் சேர போகிறாரா கங்குலி? புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக அறிவிப்பு.. திடீர் டிவிட்டால் குழப்பம்

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து கங்குலி விலக உள்ளதாக தகவல் வெளியாகியது. கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்றார்.

Recommended Video

Ganguly-யின் Cryptic Tweet! Political Entry-யா? | Aanee's Appeal |#Trending

கங்குலியின் புதிய பொறுப்பால் முதலில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், போக போக அதிருப்தி அடைந்தனர்.

கங்குலியின் தலையிட்டால் தான் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

இதே போன்று பிசிசிஐ தந்த அழுத்தத்தால் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து கங்குலி விலக, பிறகு ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலகினார். இதனால் கங்குலி மீது கோலி ரசிகர்கள் கடும் கோபம் பட்டு டிவிட்டரில் விமர்சனம் செய்தனர்.

30 வருடம்

30 வருடம்

இந்த நிலையில், கங்குலி வெளியிட்டுள்ள ஒரு டிவிட், ரசிகர்களிடையே குழப்பததை ஏற்படுத்தியுள்ளது. அதில், கிரிக்கெட் உலகிற்கு நான் வந்து இதோடு 30 வருடம் ஆகிறது.30 வருடங்களில் எனக்கு ஆதரவு அளிக்க மக்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதற்காக நான் இன்று ஒரு விஷயத்தை துவங்க போகிறேன்.நான் துவங்கும் விஷயம் பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்

அரசியலில் கங்குலி

அரசியலில் கங்குலி

நான் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் புதிய அத்தியாயத்திற்கு உங்களின் ஆதரவு தேவை என்று கங்குலி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து அரசியலில் குதிக்க போவதாக தகவல் வெளியானது. ஜெய்ஷாவுடன் நெருக்கமாக இருப்பதால், அவர் பாஜகவில் இணையலாம் என்று கூறப்பட்டது.

ஜெய்ஷா மறுப்பு

ஜெய்ஷா மறுப்பு

ஆனால், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, கங்குலி ராஜினாமா செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இதனால் கங்கலி எதற்கு இந்த டிவிட்டை போட்டார். இல்லை வேறு ஏதாவது அரசியல் கட்சியில் இணைய போகிறாரா இல்லை இது வெறும் விளம்பர யுத்தியா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், கங்கலியை இழுக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அவருக்கு உடல் நலம் குன்றியதால், அந்த பிளான டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 1, 2022, 18:28 [IST]
Other articles published on Jun 1, 2022
English summary
Sourav Ganguly creepted tweet created confusion among fans about political entry பாஜகவில் சேர போகிறாரா கங்குலி? புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக அறிவிப்பு.. திடீர் டிவிட்டால் குழப்பம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+