Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த பையனை டீம்ல எடுக்காதீங்க.. நோ சொன்ன கங்குலி.. கேப்டனுக்கு சர்ப்ரைஸ் தந்த 19 வயது வீரர்!

மும்பை : 2003 - 04 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது 19 வயதே ஆன புதிய வீரரான இர்பான் பதானை பரிசீலித்தது தேர்வுக் குழு.

Recommended Video

Ganguly didn’t want Irfan Pathan for 2003-04 Austtralia tour.

ஆனால், அவரை அணியில் தேர்வு செய்ய மறுப்பு தெரிவித்தார் அப்போதைய கேப்டன் கங்குலி.

பின்னர் அந்த தொடரில் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட அவர் ஒருநாள் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி தன்னை நிரூபித்தார்.

கங்குலி விளக்கம்

கங்குலி விளக்கம்

அந்த தொடரின் இறுதியில் கேப்டன் கங்குலி, தான் ஏன் இர்பான் பதானை அணியில் தேர்வு செய்ய மறுத்தேன் என்பது பற்றி விளக்கம் கூறி உள்ளார். இந்த சம்பவங்கள் பற்றி இர்பான் பதான் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இர்பான் பதான் வரவு

இர்பான் பதான் வரவு

இர்பான் பதான் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விக்கெட் வேட்டை நடத்தி தேர்வுக் குழுவும் கவனத்தை ஈர்த்து இருந்தார். அதிலும் வங்கதேச அண்டர் 19 அணிக்கு எதிராக அவர் 9 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது அப்போது தேசிய அளவில் பெரிய செய்தியானது.

கங்குலி மறுப்பு

கங்குலி மறுப்பு

அவரை 2003 - 04 ஆஸ்திரேலிய சுற்றுப்பயனதுக்கான அணியில் தேர்வு செய்ய தேர்வுக் குழு விரும்பியது. ஆனால், கேப்டன் கங்குலி வேண்டாம் என கூறி மறுத்துள்ளார். பின்னர், இர்பான் பதான் மாற்று வீரராக அந்த தொடரில் இடம் பெற்றார்.

ஹெய்டன் விக்கெட்

ஹெய்டன் விக்கெட்

பின்னர் இர்பான் பதான் பந்துவீசுவதை கண்ட கங்குலி, அடிலெய்டு டெஸ்டில் வாய்ப்பு அளித்து அறிமுகம் செய்தார். அந்த போட்டியில் மேத்யூ ஹெய்டன் விக்கெட்டை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார் இர்பான் பதான். ஆனால், அடுத்து நடந்த ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே உடனான முத்தரப்பு தொடரில் தான் அவர் முழு திறனை வெளிப்படுத்தினார்.

ஒருநாள் தொடரில் வாய்ப்பு

ஒருநாள் தொடரில் வாய்ப்பு

அந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இர்பான் பதான் அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி இருந்தார். 10 போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தினார். அதே தொடரில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்கள் வீழ்த்தி தன் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து இருந்தார்.

கங்குலி தந்த விளக்கம்

கங்குலி தந்த விளக்கம்

அந்த தொடரின் முடிவில் கேப்டன் கங்குலி, இர்பான் பதானிடம் அவரை தேர்வு செய்ய மறுத்தது பற்றி கூறி உள்ளார். "இர்பான் உனக்கு தெரியாமல் இருக்கலாம். நான் உன்னை இந்த சுற்றுப்பயணத்துக்கான அணியில் தேர்வு செய்ய விரும்பவில்லை. தேர்வுக் குழுவில் கூட மறுப்பு கூறினேன்" என்றார் கங்குலி.

கடினமான ஆஸ்திரேலிய தொடர்

கடினமான ஆஸ்திரேலிய தொடர்

"நான் உன் பந்துவீச்சை காணவில்லை என்பதால் அப்படி கூறவில்லை. ஆனால், கடினமான ஆஸ்திரேலிய தொடருக்கு 19 வயது வீரரை அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஆனால், உன்னை பார்த்த போது உன்னால் முடியும் என நான் முழுமையாக நம்பினேன்" என்று பதானிடம் கூறி உள்ளார் கங்குலி.

கங்குலி ஆதரவு

கங்குலி ஆதரவு

இந்த சம்பவம் பற்றி கூறிய இர்பான் பதான் கங்குலியின் கேப்டன்சி பற்றி கூறுகையில், ஒரு இளம் வீரர் அணிக்காக அனைத்தையும் கொடுப்பார் என்பதாக கங்குலி நினைத்தால் அந்த வீரர் யாராக இருந்தாலும், எங்கே இருந்து வந்தாலும் கங்குலி அவரை ஆதரிப்பார் என்றார்.

இர்பான் பதான் வாய்ப்பு

இர்பான் பதான் வாய்ப்பு

கங்குலி கேப்டன்சியில் இந்திய அணியில் அதிக வாய்ப்பு பெற்ற இர்பான் பதான் அதன் பின் வாய்ப்பை இழந்தார். 2012இல் தன் கடைசி போட்டியில் ஆடி இருந்தார். அவர் 29 டெஸ்ட், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் 301 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

Story first published: Thursday, June 4, 2020, 22:59 [IST]
Other articles published on Jun 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+