Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நானும் ஒரு நாள் கோச் ஆவேன்.. கங்குலி!

கொல்கத்தா: இந்திய அணிக்கு தானும் ஒரு நாள் பயிற்சியாளர் ஆவேன் என்று கூறியுள்ளார் சவுரவ் கங்குலி. எதிர்காலத்தில் தான் பயிற்சியாளரா் பதவியில் அமரும் சூழல் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நானும் எதிர்காலத்தில் பயிற்சியாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்ல நேரிடும் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். தற்போது பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம். தற்போது கங்குலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். அதில் சச்சின், வி.வி.எஸ். லட்சுமண் ஆகிோயரும் உள்ளனர். அடுத்த தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பு இவர்களிடம் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

21 வேட்பாளர்களை இந்தக் குழு இன்டர்வியூ செய்யவுள்ளது. நேற்று முதல் இந்த நேர்காணல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் கோச் ஆவது குறித்து பேசியுள்ளார் கங்குலி.

பாதி சுயசரிதை

பாதி சுயசரிதை

கங்குலி 'A century is not enough' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதுகிறார். இதை சுயசரிதை என்று சொல்லி விட முடியாது. இருப்பினும் ஒரு விளையாட்டு வீரர் சந்திக்கும் சவால்கள் குறித்து இதில் விளக்கியுள்ளார் கங்குலி. தனது சொந்த அனுபவங்களையும் இதில் கூறியுள்ளார். பத்திரிகையாளர் கெளதம் பட்டசார்யாவுடன் இணைந்து இதை எழுதுகிறார் கங்குலி. அடுத்த ஆண்டு இது வெளியாகும்.

இதுவரை வாய்ப்பு வரவில்லை

இதுவரை வாய்ப்பு வரவில்லை

புத்தகத்தின் பெயரை கொல்கத்தாவில் நடந்த விழாவில் அறிவித்தார் கங்குலி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுவரை நான் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் அமரும் வாய்ப்பு எனக்கு வரவில்லை. எதிர்காலத்தில் உட்கார்ந்தாலும் உட்காரலாம். இல்லை என்று மறுக்க முடியாது.

20 வருடத்திற்கு முன்பு

20 வருடத்திற்கு முன்பு

இந்திய அணியின் பயிற்சியாளரைத் தேர்வு செய்வது என்பது மகத்தானது. 20 வருடத்திற்கு முன்பு நான் முதல் முறையாக நாட்டுக்காக ஆடினேன். இப்போது நாட்டுக்காக ஒரு பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பில் உள்ளேன்.

2005ல் குழப்பம்

2005ல் குழப்பம்

2005ம் ஆண்டில் பயிற்சியாளர் விவகாரத்தில் குழப்பம் நேரிட்டது (கிரேக் சேப்பல் நியமனத்தைச் சொல்கிறார் - அப்போது கங்குலிதான் கேப்டன்). இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் இது சரியாக அமையும்.

எனக்கே ஆசை இருந்தது

எனக்கே ஆசை இருந்தது

நேர்மையாகச் சொன்னால் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எனக்கே கூட அந்த சிந்தனை இருந்தது. ஆனால் இப்போது நானே ஒருவரைத் தேர்வு செய்கிறேன். சச்சின், லட்சுமண், பிசிசிஐ செயலாளர் ஆகியோரின் உதவியுடன். சரியான நபரைத் தேர்ந்தெடுப்போம் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

Story first published: Wednesday, June 22, 2016, 11:22 [IST]
Other articles published on Jun 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+