Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2014ல் புதிய அவதாரம் எடுக்கப் போகிறேன்... கங்குலி சூசகப் பேச்சு

கொல்கத்தா: 2014ம் ஆண்டு புதிய பாத்த்திரத்தில் நுழையப் போகிறேன். அது என்ன என்பது இப்போது சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் கங்குலி.

ஆனால் அந்தப் புதிய அவதாரம், அனேகமாக அரசியலாக இருக்கலாம் என்று பலரும் அனுமானிக்கின்றனர்.

ஏற்கனவே கங்குலிக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் தருவதாகவும், ஜெயித்த பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி தருவதாகவும் பாஜக ஆசை காட்டி வருகிறது என்பதும், காங்கிரஸ் தரப்பிலிரும் கங்குலியை இழுக்க முயற்சிகள் நடந்தன என்பதும் நினைவிருக்கலாம். எனவே இவர்களில் யார் பக்கமாகவது சாய கங்குலி தீர்மானித்து விட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து கங்குலி அளித்துள்ள ஒரு டிவி பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

அரசியல் ரொம்ப சென்சிட்டிவானது

அரசியல் ரொம்ப சென்சிட்டிவானது

அரசியல் குறித்து டிவியில் பேச முடியாது. அது சென்சிட்டிவுானது. புதிய பாத்திரத்தில் நுழையப் போகிறேன் என்பதை மட்டுமே இப்போதைக்கு சொல்ல முடியும். அது எது என்பது இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. அது பல காரணிகளைப் பொறுத்தது.

மாயாஜாலத்தில் நம்பிக்கையில்லை

மாயாஜாலத்தில் நம்பிக்கையில்லை

எனக்கு மாயாஜாலத்தில் நம்பிக்கையில்லை. எனது வாழ்க்கை சாதாரணமானது. விளையாட்டு, வழக்கமான வேலைகளுடன் இ ணைந்தது, இயைந்தது. வருடா வருடம் இது மாறும் என்று நினைக்க முடியாது. இப்படியேதான் போகும் இது.

கிரிக்கெட் வாரியப் பொறுப்பா...

கிரிக்கெட் வாரியப் பொறுப்பா...

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் ஏதாவது பொறுப்பு ஏற்பேனா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. இது மற்றவர்களையும் பொறுத்தது.

கிரிக்கெட்டுக்குத் திரும்ப விரும்புகிறேன்

கிரிக்கெட்டுக்குத் திரும்ப விரும்புகிறேன்

ஏதாவது ஒரு ரூபத்தில் மீ்ண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்ப விரும்புகிறேன். அது எனக்கு சந்தோஷம் தரக் கூடியதாக இருக்கும். இதற்காக நீங்கள் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.

கிரிக்கெட்டைத் தவிர வேறு தெரியாது

கிரிக்கெட்டைத் தவிர வேறு தெரியாது

எனக்குக் கிரிக்கெட்டுக்கு அப்பால் வேறு எதுவும் தெரியாது. நான் கிரிக்கெட் விளையாடியதை நிறுத்தியது முதலே வாழ்க்கை எந்தவிதமான சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இல்லாமல் போய் விட்டது. நானாக கட்டாயமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.

பயஸ் போல இருக்க வேண்டும்

பயஸ் போல இருக்க வேண்டும்

லியாண்டர் பயஸ் இந்த வயதிலும் சுதந்திரமாக விளையாடுகிறார். அவருக்கு எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் அப்படி இல்லை. உங்களது தொழில்முறை வாழ்க்கை யாருடையாவது விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது.

சினிமாவா.. சான்ஸே இல்லை

சினிமாவா.. சான்ஸே இல்லை

நான் சினிமாவில் நடிக்கும் சான்ஸே இல்லை. அப்படி எந்தத் திட்டமும், யோசனையும் என்னிடம் இல்லவே இல்லை. நான் போய் எப்படி சினிமாவில் நடிக்க முடியும்.. எனக்கு அதற்கான தகுதி இருப்பதாகவே நினைக்கவில்லை என்றார் அவர்.

அட என்ன பாத்திரம்னு சொல்லாம எதுக்கு இப்படி ஜவ்விழுப்பு கங்குலி... போட்டு உடைத்து விட வேண்டியதுதானே...

Story first published: Wednesday, January 1, 2014, 10:25 [IST]
Other articles published on Jan 1, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+