Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிடம் வாயைக் கொடுத்து செல்லமாக வாங்கிக் கட்டிக் கொண்ட கங்குலி!

Recommended Video

Sourav Ganguly gets trolled by daughter Sana | கங்குலி-மகள் வேடிக்கையான உரையாடல்

கொல்கத்தா : பிசிசிஐ தலைவரும் இந்திய முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தன்னுடைய மகளுடன் இன்ஸ்டாகிராமில் மேற்கொண்ட வேடிக்கையான உரையாடல் வைரலாகியுள்ளது.

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை எஸ்ஜி பிங்க் பந்துகளில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் சாதித்துக் காட்டியுள்ளார் கங்குலி. அவர் தனது மகளின் கீழ்படியாமை குறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய மகளின் கேள்விக்கு பதிலளிக்கும்வகையில் கங்குலி வெளியிட்ட இந்த பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி பல லைக்குகளையும் ஷேரிங்கையும் பெற்றுள்ளது.

 சாதித்து காட்டிய கங்குலி

சாதித்து காட்டிய கங்குலி

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி இரண்டரை நாட்களில் முடிந்த இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிக்கனியை பறித்துள்ளது. இந்த போட்டியை மிக குறுகிய நாட்களிலேயே பிசிசிஐ தலைவரான கங்குலி சாதித்து காட்டியுள்ளார்.

 எஸ்ஜி பிங்க் பந்தில் அபார ஆட்டம்

எஸ்ஜி பிங்க் பந்தில் அபார ஆட்டம்

இந்தியாவில் முதல்முறையாக எஸ்ஜி பிங்க் பந்தில் நடத்தப்பட்டுள்ள இந்த முதல் பகலிரவு போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இன்னிங்க்ஸ் வெற்றி மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வெற்றி கண்டுள்ளது.

 டெஸ்ட் போட்டியில் ரசிகர் கூட்டம்

டெஸ்ட் போட்டியில் ரசிகர் கூட்டம்

இந்த வெற்றியை அடுத்து கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். டெஸ்ட் போட்டிக்கு கூடிய இந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சியடைவதாகவும் ரிலாக்சாக உணர்வதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

 சனா கங்குலி கேள்வி

சனா கங்குலி கேள்வி

சவுரவ் கங்குலியின் இந்த பதிவை கண்ட அவரின் மகள் சனா கான், உடனடியாக அதே பதிவில் நீங்கள் விரும்பாதது தான் எது என்று நகைச்சுவையுடன் கேட்டிருந்தார்.

 சனாவின் உடனடி பதில்

சனாவின் உடனடி பதில்

நீங்கள் விரும்பாததுதான் எது என்ற சனாவின் கேள்விக்கு பதிலளித்த கங்குலி, சனாவின் கீழ்படியாமைதான் என்று வேடிக்கையாக பதிலளித்தார். உடனடியாக இந்த பதிவிற்கு பதிலளித்த சனா, தங்களிடம் இருந்து கற்றுக் கொண்டது என்று சிரிப்பு எமோஜியுடன் கூறினார்.

 வைரலான பதிவு

வைரலான பதிவு

மகள் மற்றும் தந்தையின் இந்த உரையாடல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடையே மிகுந்த வைரலானது. பலர் இந்த உரையாடலை ரசித்து தங்களது லைக்குகளை அளித்திருந்தனர்.

Story first published: Tuesday, November 26, 2019, 12:53 [IST]
Other articles published on Nov 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+