Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை விட்டுட்டு டிரிப் போனா சந்தோஷமாக்கும் உங்களுக்கு.. கங்குலியை வாரிய மகள் சனா!

Recommended Video

கங்குலியை Twitterயில் கலாய்த்த மகள் சனா l Sourav Ganguly

லண்டன் : தன்னுடைய தந்தையும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி சமூகவலைதளங்களில் போடும் கமெண்டுகளுக்கு உடனடியாக பதிலளித்து, அவரை கலாய்ப்பதில் அவரது மகள் சனா கங்குலி எப்போதும் முதலிடத்தில் இருப்பார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்வது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கங்குலி கருத்து தெரிவித்திருந்த நிலையில், வீட்டில் இருந்தால் 12 மணிவரை தூங்குவது யார் என்று கேள்வி கேட்டு சனா அவரை கலாய்த்திருந்தார்.

இதேபோல தற்போது 4 நாடுகள் கிரிக்கெட் தொடர் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள கங்குலி, முன்னதாக விமானத்தில் இருந்தபடி செல்பி எடுத்து வெளியிட்டு மற்றொரு இலக்கிற்கான பயணம் என்று கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சனா கான் தன்னை விட்டுவிட்டு இலக்கை நோக்கி பயணம் சென்றது மகிழ்ச்சிதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

4 நாடுகள் கிரிக்கெட் தொடர்

4 நாடுகள் கிரிக்கெட் தொடர்

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்ற பின்பு தனது 4 நாடுகள் கிரிக்கெட் தொடர் குறித்த யோசனையை வெளியிட்டார். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மற்றொரு நாடு விளையாடவுள்ள இந்த தொடர் குறித்து மேலும் ஆலோசனை மேற்கொள்ள தற்போது அவர் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சங்கம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

சவுரவ் கங்குலி செல்பி

சவுரவ் கங்குலி செல்பி

இந்நிலையில் விமானத்தில் இருந்தபடி செல்பியை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, மற்றொரு இலக்கிற்கான பயணம் என்று கேப்ஷனையும் வெளியிட்டுள்ளார். தன்னுடைய 4 நாடுகள் தொடருக்கு ஐசிசியின் ஒப்புதலை கோரியுள்ள நிலையில், அவரது இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வம்பிழுத்த மகள் சனா

வம்பிழுத்த மகள் சனா

இந்நிலையில் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி, அவரை வம்பிழுக்கும்வகையில், நான் இல்லாமல் மகிழ்ச்சியாக நீங்கள் சென்றுள்ள பயணம் என்று கமெண்ட்டை பதிவு செய்துள்ளார். எப்போதும் தன்னுடைய தந்தையின் பதிவுகளுக்கு அவரை வம்பிழுத்து கமெண்ட்டுகளை போடும் சனா, தற்போதும் அந்த வேலையை மிகச் சிறப்பாக செய்துள்ளார்.

கங்குலி பதிவிற்கு சனா கமெண்ட்

கங்குலி பதிவிற்கு சனா கமெண்ட்

கடந்த டிசம்பர் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்வது குறித்து சவுரவ் கங்குலி பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சனா கங்குலி, வேலை இல்லாதபோது 12 மணிவரை யார் தூங்குவது என்று கேள்வி எழுப்பி, இன்னும் அதிக தூரங்கள் செல்லவேண்டும் அப்பா என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே, இவர்கள் இருவரது இந்த வாடிக்கையான வம்பிழுக்கும் பதிவுகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Story first published: Friday, February 7, 2020, 14:53 [IST]
Other articles published on Feb 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+