Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நான் எதுவும் பண்ணலையா??..” பொங்கி எழுந்த சவுரவ் கங்குலி.. சீனிவாசன் குற்றச்சாட்டுக்கு பதிலடி?

மும்பை: பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சவுரவ் கங்குலி தனது பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளார்.

பிசிசிஐ-ன் தலைவரான சவுரவ் கங்குலி மற்றும் செயலாலர் ஜெய் ஷாவின் பதவிக்காமல் முடிவுக்கு வருகிறது.

இதனையடுத்து இவர்கள் இருவரும் தான் மீண்டும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கங்குலி மட்டும் கழட்டிவிடப்பட்டார்.

கங்குலி பதவி நீக்கம்

கங்குலி பதவி நீக்கம்

இதற்காக நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் சவுரவ் கங்குலி, தான் தலைவர் பதவியில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் முன்னாள் பிசிசிஐ & ஐசிசி தலைவரான சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கங்குலி சரிவர செயல்படவில்லை என்றும் அவரின் பணிகள் திருப்தியளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுள்ளதாக தெரிகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

கடந்த 2019ம் ஆண்டு பிரிஜேஸ் பட்டேலை பிசிசிஐ தலைவராக கொண்டு வர சீனிவாசம் பெரும் முயற்சி செய்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் கங்குலி பதவியை பிடித்தார் எனக்கூறப்படுகிறது. எனவே தனது வார்த்தைகளுக்கு மதிப்பு உள்ளது என்பதை நிரூபிக்க நினைத்துள்ளார் கங்குலி மீது குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகிறது.

கங்குலி பதில்

கங்குலி பதில்

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சவுரவ் கங்குலி. இதுகுறித்து பேசிய அவர், நான் பிசிசிஐ தலைவராக நிறைய பெரும் விஷயங்களை முடித்துக்காட்டியுள்ளேன். கொரோனா நேரத்தில் ஐபிஎல்-ஐ வெற்றிகரமாக நடத்தியது, ஐபிஎல் ஒளிபரப்பில் பெரும் லாபம், மகளிருக்கான ஐபிஎல் ஏற்பாடு, காமன்வெல்த்-ல் இந்திய அணி வெள்ளிப்பதக்கம், U19 அணி உலகக்கோப்பை வென்றது, ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் வெற்றி என சாதனைகளை பட்டியலிட்டார்.

கங்குலி பதிலடி

கங்குலி பதிலடி

தொடர்ந்து பேசிய கங்குலி, நிறைய நல்ல விஷயங்களை செய்துள்ளதால் மன நிறைவாக உள்ளது. நிறைய ஆண்டுகளுக்கு யாராலும் பதவியில் நீடிக்க முடியாது, அதிகாரமும் செய்ய முடியாது எனக்கூறினார். இதன் மூலம் ஜெய் ஷா மற்றும் சீனிவாசனுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Thursday, October 13, 2022, 19:45 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+