Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அடடே.. இது போதுமே..” விராட் கோலி ஃபார்ம் குறித்து கங்குலி கூறிய தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்!

மும்பை: விராட் கோலி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ள வார்த்தைகள் ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

கோலியின் ஃபார்ம்

கோலியின் ஃபார்ம்

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் சமீப காலமாக இந்திய அணியின் பேட்டிங் அட்டகாசமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆசிய கோப்பையில் ஒரு சிறிய குழப்பம் ரசிகர்களிடையே உள்ளது. அதற்கு காரணம் விராட் கோலியின் ஃபார்ம் தான். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்தே ஓய்வில் இருக்கும் அவர் ஆசிய கோப்பையில் ஃபார்முக்கு திரும்புவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கங்குலி கருத்து

கங்குலி கருத்து

இந்நிலையில் கோலிக்கு ஆதரவாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார். அதில், விராட் கோலியை பயிற்சி பெற விடுங்கள். அவர் நிறைய போட்டிகளில் விளையாடட்டும். அவர் மிகப்பெரிய வீரர், இந்திய அணிக்காக நிறைய ரன்களை குவித்தவர். தற்போதைய சூழலை வைத்து பார்க்கும் போது ஆசிய கோப்பையில் கோலி நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார் என நம்பிக்கை உள்ளது.

தடுக்கவே முடியாது

தடுக்கவே முடியாது

இந்த தொடரில் கோலி சதமடிப்பது மட்டும் பெரிய விஷயமாக இருக்கப்போவதில்லை. ஆசிய கோப்பையில் இருந்து பழைய விராட் கோலியின் ஃபார்ம் மீண்டும் வரும். அதன்பின்னர் அவரை யாராலும் தடுக்க முடியாது. இதனை எதிர்நோக்கி நானும் காத்துள்ளேன் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

கடைசி கட்ட வாய்ப்பு

கடைசி கட்ட வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை புறக்கணித்து சென்ற கோலிக்கு, இந்த ஆசிய கோப்பை தான் கடைசி வாய்ப்பாகும். இதில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். இதனை பிசிசிஐ அதிகாரிகளே கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 16, 2022, 16:28 [IST]
Other articles published on Aug 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+