ரிஷப் பண்ட் குறித்து கங்குலி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. உயிரோடு இருக்கிறதே பெருசு சார்.. விவரம்
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கடந்த ஆண்டு இறுதியில் பயங்கர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இதில் அவர் உயிர் பிழைத்தது பெருசு என ரசிகர்கள் கருதினர். இந்த நிலையில் ரிஷப் பண்ட் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது முழு உடல் தகுதி பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் பண்ட் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கையில் குச்சியை வைத்து நடந்து கொண்டிருந்தார். ரிஷப் பன்ட் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ரிஷப் பண்ட் காயம்
இருப்பினும், பண்ட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பே அணிக்கு திரும்பி விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் தான் பிசிசிஐயின் முன்னாள் தலைவரும் டெல்லி அணியின் முக்கிய பொறுப்பை வகிக்கும் கங்குலி ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ரிஷப் பண்ட் தற்போது நலமுடன் இருந்தாலும் அவர் பூரண குணமடைய ஒரு ஆண்டு ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
மேலும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று இந்திய அணிக்கு திரும்ப கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்றும் கங்குலி கூறியுள்ளார். கங்குலியில் இந்த கருத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரிஷப் பண்ட் உலகக்கோப்பை தொடருக்கு எதிர்பார்த்த நிலையில் தற்போது அது நடக்காது என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இந்திய ஒரு நாள் அணியில் விக்கெட் கீப்பர் பொறுப்பு கேஎல் ராகுலுக்கு தான் இருக்கும்.

பலவீனம்
இதனால் கே எல் ராகுல் நடுவரிசையில் அதிரடியாக விளையாடி தனது பழைய பார்மை மீட்க வேண்டிய பொறுப்புக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியில் டாப் ஆர்டரில் எந்த இடதுகை பேட்ஸ்மேன்களும் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இடது கை பேட்ஸ்மேன்கள் குறைந்தது இரண்டு பேராவது ஒவ்வொரு அணியிலும் டாப் ஆர்டரில் இருப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் வலது கை பேட்ஸ்மேன்களால் அடிக்க முடியாத சில ஷாட்டுகளை இடது கை பேட்ஸ்மேன்களுக்கு தான் சாதகமாக அமையும்.

ஆளே இல்லை
எடுத்துக்காட்டாக, இடது கை சுழற் பந்துவீச்சாளர்களை இடது கை பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு ரன் குவிக்க ஏதுவாக இருக்கும். தற்போது ரிஷப் பன்ட் இல்லாதது இந்திய அணிக்கு அது பெரும் மைனஸ் ஆக அமைந்துள்ளது. தற்போது இருக்கும் அணியில் ஜடேஜா மட்டும்தான் டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications