For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாழ்க்கையே முடங்கிப்போய் கிடக்கு... விளையாட்டப்பத்தி என்னத்த சொல்றது

மும்பை : கொரோனாவை அடுத்து ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபில் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு ஐபிஎல் 2020 குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Joginder Sharma talks about his duty and family

கொரோனா காரணமாக அனைவரது வாழ்க்கையும் முடங்கிப் போயுள்ள நிலையில், விளையாட்டின் எதிர்காலம் குறித்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விமானநிலையங்களும் மூடப்பட்டு வீரர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், வீரர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு பயணம் மேற்கொள்வார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்த டீமா இருந்தா ஓரமா உட்கார வைச்சுருப்பாங்க.. ஆனா தோனி என்ன பண்ணாரு தெரியுமா? வாட்சன் நெகிழ்ச்சி!மத்த டீமா இருந்தா ஓரமா உட்கார வைச்சுருப்பாங்க.. ஆனா தோனி என்ன பண்ணாரு தெரியுமா? வாட்சன் நெகிழ்ச்சி!

வீட்டிற்குள் முடங்கிய வீரர்கள்

வீட்டிற்குள் முடங்கிய வீரர்கள்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடுமுழுவதும் முடங்கியுள்ள நிலையில், இதுவரை கண்டிராத பல்வேறு சிக்கல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டிய நிலையில் மாநில அரசுகளும் அவர்களை வீடுகளில் இருந்து வெளியில் வரவேண்டாம் என்று கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

கேள்விக்குறியான ஐபிஎல் 2020

கேள்விக்குறியான ஐபிஎல் 2020

சர்வதேச அளவில் விளையாட்டு உலகமே முடங்கியுள்ளது. விளையாட்டு போட்டிகளை காண முடியாமல் ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் அடையாளமான ஐபிஎல் போட்டிகள் வரும் 15ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகள் கண்டிப்பாக சாத்தியப்படாது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

சாதகமான சூழல் இல்லை

சாதகமான சூழல் இல்லை

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வீரர்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் குறித்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை. வீரர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு செல்வார்கள் என்று சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய நிலையில் எந்த விளையாட்டிற்கும் சாதகமான நிலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நாளை அறிவிக்கப்படும்

நாளை அறிவிக்கப்படும்

இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகிகளுடன் இறுதி விவாதம் மேற்கொண்டு, ஐபிஎல் 2020 குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று சவுரவ் கங்குலி மேலும் கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் துவங்குவது குறித்த புதிய அறிவிப்பு நாளை வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. ஹர்பஜன் சிங், கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் ஐபிஎல் தள்ளி வைக்கப்படுவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, April 12, 2020, 14:42 [IST]
Other articles published on Apr 12, 2020
English summary
Sourav Ganguly on postponement of IPL tournament
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X